நைட்டியில் ரவி, கோபத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரவியை நைட்டி போட வைத்த சுருதி அப்படியே போய் டீ போட்டுக் கொண்டு வா என்று சொல்ல ரவி முடியாது என்று சொல்கிறார். அப்படின்னா அவ்வளவுதான் லவ்வா என்று கேட்க வேறு வழியில்லாமல் ரவி டீ போட கிச்சனுக்கு செல்கிறார். யாருமில்லாத நேரமாக பார்த்து கிச்சனுக்கு ஓடி டீ போட தயாராக ரோகினி தண்ணீர் பிடிக்க வந்ததும் ரவி ஒளிந்து கொள்கிறார்.

அதன் பிறகு டீ போட்டுக் கொண்டிருக்க விஜயா பசிக்குது என்று தூக்கத்திலிருந்து எழுந்து சாப்பிட வர கிச்சனுக்குள் யாரோ இருப்பதை பார்த்து கதவை தாக்கிக்கொண்டு திருடி திருடியென சத்தம் போடுகிறார். விஜயாவின் சத்தத்தை கேட்டு எல்லோரும் அலறி எழுந்து ஓடி வர முத்து என்னப்பா அம்மா ஆம்பளையும் சத்தம் மாதிரி சவுண்ட் கொடுத்துட்டு இருக்காங்க என்று கேட்க யாரோ ஒரு திருடி வந்துட்டு இருக்கா என்று சொல்கிறார்.

நைட்டி போட்ட திருடி என்று மனோஜ் சொல்ல முத்து உள்ளே போக ரவி லைட் ஆப் செய்து ஓடி ஒளிகிறார். உள்ளே போக முயற்சித்த முத்துவை மீனா இழுத்து பிடித்து இருங்க கையில ஏதாவது வச்சிட்டு இருக்கப் போறா என்று சொல்கிறார். அதன் பிறகு முத்து உள்ளே சென்று திரும்பி கொண்டு இருந்த ரவியை அழைக்க தூக்கி வெளியே வர யாருடி நீ இவ்வளவு தாடி வளர்த்து வச்சிருக்க என்று விஜயா கேட்டு முகத்தை மூடி இருந்த துணியை விலக்க ரவி என்ன தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ரவி என்னடா கோலம் இது என்று எல்லோரும் கேட்க விஜயா ரவி போட்டோ அடிக்க ஸ்ருதி உள்ள இருந்து ஓடி வந்து நான்தான் என்னோட டிரஸ்ஸ போட சொன்னேன் என்று சொல்கிறார். விஜயா இதெல்லாம் என்ன விளையாட்டு எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல என்று கோபப்படுகிறார். மீனா ரவி ஏன் உங்க டிரஸ் போட்டு இருக்காரு என்று கேட்க நான் அவன் ட்ரெஸ் போட்டு இருக்கேன் அதனால அவன் என் டிரஸ் போட்டு இருக்கான் என சொல்கிறார்.

பிறகு அண்ணாமலை இந்த விளையாட்டு எல்லாம் உங்க ரூமுக்குள்ள வச்சுக்கங்க என்று சொல்கிறார். விஜய் அண்ணாமலை இருவரும் ரூமுக்கு சென்றதும் மனோஜ் மற்றும் ரவியை டா இல்ல டி என்று சொல்லி கிண்டல் அடித்து ரவியை பிடித்து உட்கார வைத்து குரூப் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.

மறுநாள் மீனா வழக்கம் பல வேலை செய்து கொண்டிருக்க முத்து காலையிலே வேலை செஞ்சு தொடங்கிட்டா பூ எப்ப கட்டறது பிசினஸ் எப்படி நல்லா போகும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். விஜயா டீ எங்க என்று கேட்கிறார். வீட்ல இருக்க வேலையை முடிச்சிட்டு தான் மற்ற வேலைக்கு போகணும் என்று கண்டிஷன் போட இதே கண்டிஷன் மத்தவங்களுக்கு போட வேண்டியதுதானே என்று முத்து சத்தம் போடுகிறார். பிறகு மீனா எனக்கு இதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை நீங்க போங்க என்று சொல்லி முத்துவை அனுப்ப விஜயா ரோகினிக்கு பிடிச்சதை கேட்டு சமைச்சிடு என்று சொல்கிறார்.

ஏன் ரோகினிக்கு பிடிச்சது தான் சாப்பிடனுமா என்று முத்து கேட்க மனோஜ் ரோகிணி புதுசா பிசினஸ் ஆரம்பிக்கப் போறாங்க நிறைய இடத்துக்கு போக வேண்டியது இருக்கும் சரியா சாப்பிட முடியாது அதனால அவங்களுக்கு பிடித்ததை சமை என்று ஆர்டர் போடுகிறார்.

மனோஜ் பிச்சை எடுத்த விஷயத்தைப் பற்றி முத்து கிளற மனோஜ் மற்றும் ரோகினி சண்டைக்கு வந்து விடுகின்றனர். அண்ணாமலை வாக்கிங் சென்று விட்டு வீட்டுக்கு வர என்ன சத்தம் என்று கேட்க அண்ணாமலையிடம் பஞ்சாயத்து செய்கின்றனர்.

அதன் பிறகு விஜயா ரோகிணி உனக்கு பிடிச்சதை சொல்லு அவ சமைக்கட்டும் என்று விஜயா சொன்னதும் ரோகிணி மீனாவை பார்த்து சிரித்து வெஜிடபிள் பிரியாணி வேண்டும் என்று கேட்கிறார். மீனா அதுக்கான காய்கறி எல்லாம் வீட்ல இல்ல என்று சொன்ன ஏன் அது கூட வாங்கிக்க மாட்டியா என்று விஜயா சொல்ல அண்ணாமலை ஏன் இது கூட மீனா தான் வாங்கிட்டு வரணுமா என்று கேள்வி கேட்கிறார்.

முத்து இதைக் கேட்டா தான் பொறாமை புடிச்சவனே சொல்றாங்க என்று சொல்லி முத்து உனக்கு என்ன வேணும் சொல்லு மீனா என்று லிஸ்ட் கேட்க ஏன் நீங்க போய் வாங்கிட்டு வர போறீங்களா என்று கேட்கிறார். நான் ஏன் போகணும் பார்லர் அம்மா தானே வெஜிடபிள் பிரியாணி கேட்டு அப்போ அவங்க புருஷன் தான் போய் வாங்கிட்டு வரணும் என்று மனோஜ் கோர்த்து விட நான் ஏண்டா மா அதெல்லாம் வாங்கிட்டு வர போகணும் என்று கேட்கிறார்.

புதுசா பிசினஸ் பண்ண போறேன் வியாபாரம் எல்லாம் எப்படி பண்ணனும்னு கத்துக்க வேண்டாமா என்று கோர்த்துவிட்ட அண்ணாமலையும் ஆமா முத்து சொல்றது சரிதான் நீ போய் வாங்கிட்டு வா என்று சொல்லி அனுப்பி விடுகிறார். வெளியே வந்த மனோஜ் வெயில் ஓவரா இருக்கு என்று காரில் சென்று வெஜிடபிள் வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். வெறும் நாலு காய் 490 ரூபாய் என்று பில்லை கொடுத்து மீதி பணத்தை கொடுக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதைப் பற்றி மனோஜிடம் கேட்டுக் கொண்டிருக்க கடைக்காரர் வந்து கூப்பிட்டே இருந்த வந்துட்டே இருந்துட்டாரு மெஷின் ஃபால்ட் 190 தான் ஆச்சு இந்தாங்க மீதி பணம் என்று 300 ரூபாய் கொடுக்க முத்து ஒரு வெஜிடபிள் பிரியாணிக்கு காய்கறியே வாங்க தெரியல இவன் எப்படி பிசினஸ் பண்ண போறானோ என்று நக்கல் அடிக்க மீனாவும் சிரிக்க ரோகிணி அவமானப்பட்டு நிற்கிறார்.

அதன் பிறகு சரி சரி அதை விடு நாளைக்கு நிறைய சமைக்கணும் முத்து என்ன நாள் என்று கேட்க உன்னோட வாழ்க்கையில முக்கியமான நாள் என்ன சொல்கிறார். கொஞ்ச நேரம் யோசித்த முத்து ஓடுகாளி உங்க பணத்தை எடுத்துக்கிட்டு ஓடிய நாளா என்று சொல்கிறார்.

முத்து கல்யாண நாள் பற்றி பேசுவார் என்று ஆசையோடு எதிர்பார்த்த மீனா இதனால் ஏமாற்றம் அடைகிறார். அண்ணாமலை நல்லா யோசிச்சு பாரு அதனால வேற எதுவும் நடக்கலையா என்று கேட்க வேற என்ன என்று முத்து யோசிக்க மீனா கோபமாக ரூமுக்குள் சென்று விட அண்ணாமலை உன்னோட கல்யாண நாள் அத கூட மறந்துட்டியா போய் மீனாவை சமாதானப்படுத்து என்று அனுப்பி வைக்கிறார்.

உள்ளே வந்த முத்துவிடம் மீனா கோபப்பட எனக்கு எடுத்ததும் அந்த ஓடுகாலி ஓடுனது தான் ஞாபகம் வருது. நமக்கு பொண்ணு பார்த்து தட்டு மாத்தி நிச்சயதார்த்தம் நடந்து முறையா கல்யாணம் நடந்திருந்தால் ஞாபகம் இருந்திருக்கும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 15-05-24
jothika lakshu

Recent Posts

Mudhal Parvai Lyrical Video

Mudhal Parvai Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran

6 hours ago

MANASU THANNALA Lyrical Video

MANASU THANNALA Lyrical Video | Ravi Teja | GV Prakash | Hesham | Shiva Nirvana…

7 hours ago

Karuppu Aadu Lyrical Video

Karuppu Aadu Lyrical Video | Maaruvesham | Vaibhav | Viyana | Srini | Rajkumar Amal

7 hours ago

All Pass Teaser

All Pass Teaser | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen | Senthikumari,…

7 hours ago

Atrocity Music Video

Atrocity Music Video | Pyaar Prema Kalyanam | Elan, Saanve, Yuvan Shankar Raja | Netflix…

7 hours ago

100 கிலோ எடையால் அவதி… மனம் திறந்த விஸ்மயா மோகன்லால்!

நடிகர் மோகன்லாலின் மகளும், தற்போது திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வரும் நடிகையுமான விஸ்மயா மோகன்லால், தனது உடல் எடை மற்றும்…

7 hours ago