siragadikka aasai serial episode update 14-06-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சத்யாவின் மனமாற்றத்தால் சிட்டி கடுப்பாக்கிறார். இருந்தாலும் சரி சத்யா இனிமே உன் மாமா விஷயத்துல தலையிட வேண்டாம் என்று சொல்கிறார்.
இதையடுத்து ரோகிணி மனோஜ் கடையில் இருக்கும் போது வசீகரன் அங்கு வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். ரோகினியிடம் கல்யாணத்துக்கு பணம் கேட்க என்கிட்ட பணம் ஏதும் இல்லை என்று சொல்ல அப்போ பணமா வேண்டாம் பொருளா கொடு என்று சொல்கிறார்.
பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி என எல்லாவற்றிலும் ஒவ்வொன்றை கேட்க ரோகினி அதுக்கெல்லாம் பணம் யார் தருவா என்று கேட்க சீர் வரிசைக்கு யாராவது பணம் தருவாங்களா என்னுடைய கல்யாணத்துக்கு நீ கொடுக்கிற சீர் நீ கொடுக்கலைன்னா மனோஜ் கிட்ட உண்மையை சொல்லிடுவேன் என்று மிரட்டி பொருட்களை வாங்கிக் கொண்டு செல்கிறார்.
கடையிலிருந்து பொருட்கள் வண்டியில் ஏற்றி செல்வதை பார்த்த மனோஜ் பெருசா சேல்ஸ் ஆகியிருக்கு போல என்று ஆர்வமுடன் உள்ளே வந்து கல்லாவை பார்க்க பணம் இல்லாததை பார்த்து ஷாக் ஆகிறார். ரோகிணி எனக்கு தெரிஞ்சவங்க தான் இஎம்ஐ-ல கொடுத்திருக்க என்று சொல்ல டவுன் பேமெண்ட் கூட இல்லாமல் கொடுத்து இருக்க என்று மனோஜ் கேள்வி கேட்க ரோகிணி கோபப்பட்டு மனோஜை அடக்குகிறார்.
அடுத்து ஸ்ருதி சீனாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது நான் உங்கள மாதிரி தான் அமைதியா இருக்க மாட்டேன் எனக்கு உதவிக்கும் சண்டை வந்தா ரவியோட மூக்குலேயே குத்திடுவேன் அப்புறம் பேண்டேஜ் போட்டுவிட்டு தான் சுத்தணும் என்று சொல்கிறார். மீனா நான் உங்களை கோபப்படுத்தினால் என்ன பண்ணுவீங்க என்று கேட்க நான் நகை வச்சிருக்கேன் புடிச்சு கீறி விட்டு விடுவேன் என்று சொல்கிறார். இதை வெளியிலிருந்து ஒட்டு கேட்ட விஜயா சந்தோஷப்படுகிறார்.
உடனே மீனா அத்தை கோபப்படுத்தனும் என்ன பண்ணுவீங்க என்று கேட்க பிடித்து நல்லா கலாய்த்து விட்டுடுவேன். அப்பவும் அடங்கலனா சூடு போட்டு விட்டுடுவேன் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். பிறகு கிச்சனுக்கு வந்து ஸ்ருதியை அனுப்பிவிட்டு மீனாவை பிடித்து திட்டுகிறார்.
பிறகு ரோகிணி வித்யாவிடம் நடந்த விஷயத்தை சொல்லி சிட்டியை வந்து சந்தித்து வசீகரனை ஒரு தட்டி தட்டி வைக்க வேண்டும் என்று சொல்ல எதுக்கு உங்களை பிளாக்மெயில் பண்றான்? உங்கள பத்தி அப்படி என்ன விஷயம் தெரிந்தது என்று சிட்டி கேட்க ரோகினி உன்னால உதவி பண்ண முடியுமா முடியாதா என்று கேட்க சிட்டி ரோகினியை வைத்து முத்துவை பழிவாங்க திட்டம் போட்டு சரி உதவுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறார்.
அதன் பிறகு வசீகரனை வர வைத்து பிளாக் மெயில் பண்ற என்று அடி கொடுக்க அங்கிருந்து அவர் தப்பி ஓடு ஒரு பாட்டு என் மீது வண்டியை மோதி விட்டு நிற்காமல் செல்ல அந்த வழியாக வந்த முத்து வசீகரனை துரத்தி செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…