விஜயா கொடுத்த ஷாக், அதிர்ந்து போன ரோகிணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து பிரியாணி, ரைத்தா, சிக்கன் 65 முட்டை என எல்லாவற்றையும் இலையில் போட்டு பரிமாற வாசனையை பார்த்து மனோஜ் ரோகினியையும் அம்மாவையும் கூப்பிட போக ரோகிணி அலையாத மனோஜ் என கூறுகிறார்.

விஜயா எனக்கு ஒன்னும் வேண்டாம் என்று வீராப்பாக உட்கார்ந்திருக்க முத்து அப்பாவை கண்காட்டி சாப்பிட கூட்டிச் செல்கிறார். பிறகு ரோகிணி ஆன்ட்டி பட்டினியா இருந்தா உங்களுக்கு கிட்னில ஸ்டோன் வரும் அல்சர் வரும் என்று சொல்ல அப்போது விஜயா எனக்கு வேண்டாம், வேணும்னா நீங்க போய் சாப்பிடுங்க என்று சொன்னதும் அப்படியா சரி ஆன்ட்டி என்று மனோஜை கூட்டி வந்து சாப்பிட உட்காருகிறார் ரோகிணி.

முத்து இது ஒன்றும் சாதாரண பிரியாணி கிடையாது பிரசாதம் ஏன் முஸ்லிம் பிரண்டு வீட்டில் நோன்பு இருக்காங்க அதனால அவங்க சாமிக்கு படைச்சு கொடுத்த பிரியாணி இதை எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டு ஒரு விஷயத்தை வேண்டுமென்றால் அது கண்டிப்பா நடக்கும். குறிப்பா பிரிஞ்சு போனவங்க திரும்பவும் வீடு வந்து சேருவாங்க என்று சொல்ல விஜயா திருதிருவென முடித்து என் புள்ள இந்த வீட்டுக்கு வரணும் என்பதற்காக நான் சாப்பிடுறேன் என்று உட்காருகிறார்.

உடனே பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட அண்ணாமலை அதை பார்க்க நான் ஒன்னு பசிக்காக சாப்பிடல என் பிள்ளை வரணும்னு சாப்பிடுறேன் என்று டயலாக் விடுகிறார். மனோஜ் பிரியாணி சூப்பரா இருக்கு என்று சொல்ல வெளிநாட்டிலிருந்து எப்ப வர வச்சு செஞ்சிருக்காங்க என்று சொல்ல உடனே விஜயாவுக்கு ரோகிணியின் அப்பா ஞாபகம் வருகிறது.

ஆமா ரோகினி இந்த பிரச்சனையில நான் உங்க அப்பாவையே மறந்துட்டேன். உங்க அப்பா ஏன் வரல எங்க இருக்காரு? ஏர்போர்ட்ல இருந்து இன்னுமா வந்துட்டு இருக்காரு என்று கேள்வி மேல் கேள்வி கேட்க முத்து எனக்கு என்னவோ இதெல்லாம் நம்பற மாதிரி தெரியல என்று சொல்ல விஜயா கோபப்பட அண்ணாமலை இப்போ எதுக்கு அதெல்லாம் முதல்ல சாப்பிடு என்று சாப்பிட வைக்கிறார்.

பிறகு விஜயா ரோகினி ரூமுக்கு சென்று உண்மையாகவே உங்க அப்பா வருவாரா வரமாட்டாரா நீ சொல்ற கதை எல்லாம் நம்பிக்கை இருக்க நான் ஒன்னும் முட்டாள் இல்ல. உண்மையாவே உனக்கு அப்பா இருக்காரா இல்லை இதெல்லாம் கற்பனையாக என்று கேட்க ரோகினி என்ன ஆண்ட்டி இப்படியெல்லாம் பேசுறீங்க, எனக்கு மட்டும் எங்கப்பா வரணும் அவர்கிட்ட பேசணும்னு ஆசரிக்காக ஆனால் அவர் போனையே எடுக்க மாட்டுறாரு என்று கண்ணீர் விட உன் அழகை எல்லாம் நான் நம்ப மாட்டேன்.

எங்க அப்பா எங்க வந்தே ஆகணும் இல்லனா இந்த வீட்ல உனக்கான இடம் எது நீ நான் தேர்வு செய்ய வேண்டியது இருக்கும் மனோஜ்க்காக கூட பார்க்க மாட்டேன் என வார்னிங் கொடுக்க ரோகினி அதிர்ந்து போய் நிற்கிறார்.

அடுத்ததாக முத்து ரூமுக்குள்ள இருக்க மீனா சீரகத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார். பிரியாணி கதை பற்றி நோண்டி நோண்டி கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் அம்மா சாப்பிட்டால் தான் அப்பா சாப்பிடுவேன் என்று சொல்லிட்டாரு அம்மாவை சாப்பிட்டு வைக்கணும் அதனால கடையில் தான் பிரியாணி வாங்கிட்டு வந்தேன் என்று சொல்கிறார்.

அத்தை கிட்ட நீங்க எவ்வளவோ கோபப்பட்டாலும் அவங்க ரெண்டு நாளா சாப்பாட்டில் இருந்து தானே பிரியாணி வாங்கி வந்தீங்க உங்களுக்கு அவங்க மேல இவ்வளவு பாசமா என்று கேட்க எனக்கு முதல் வாய் சாப்பாடு கொடுத்தவங்க அவங்க தானே என்று முத்து பீலிங்கோடு பேசுகிறார். மீனா முத்துவின் மனசை பாராட்டி பேசவும் வெறும் வார்த்தையில் மட்டும்தான் பாராட்டா வேற ஒன்னும் இல்லையா என்று கன்னத்தை காட்ட மீனா முத்துவை பிடித்து தள்ளி சவாரி இருக்குன்னு சொன்னீங்களே என்று சொல்கிறார்.

பிறகு முத்து சவாரிக்கு கிளம்ப மீனா அவரைப் பார்த்து சிரிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 10-04-24
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

5 hours ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

8 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

9 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

12 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

12 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

12 hours ago