உண்மையை உடைத்த ரோகினி, ஸ்ருதி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் மனோஜ் ஆட்டோவில் வந்து இறங்க அங்கு வித்யா காத்துக் கொண்டிருக்கிறார்.

மனோஜ் இங்கே எதுக்கு இறங்கின என்று கேட்க வாங்க சொல்றேன் என்று சொல்லி வித்யாவிடம் செல்ல இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்கிறார். வேலை தேடி அதுல ப்ரொமோஷன் வாங்கி வந்தேன்னு பார்த்தா வேலைக்கு போகாம அப்பாவா ப்ரோமோஷன் வாங்கிட்டீங்க என்று மனோஜை கலாய்க்கிறார்.

பிறகு மனோஜ் ரோகிணியை தனியாக கூட்டிட்டு போய் ரோகினி கன்ஃபார்மா என்று கேட்க டாக்டர் கிட்ட போனா தானே தெரியும் என்று பதில் சொல்கிறார். ஒருவேளை கன்ஃபார்ம்னு சொல்லிட்டாங்க என்ன பண்றது என கேட்க வித்யா பெற்று வளத்து காது குத்தி கொண்டாடுங்க என்று கூறுகிறார். பிறகு ரோகிணியை தனியாக அழைத்துச் சென்று நமக்கு இப்போ இந்த குழந்தை வேணுமா? கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம்னு தானே பிளான் பண்ணி இருந்தோம் என்று கேட்கிறார்.

சரி ஒரு வேளை கன்ஃபார்ம்னு சொல்லிட்டாங்கனா என்ன பண்ணலாம் என்று ரோகிணி கேட்க அதுக்கு தான் வேற வழி இருக்கு என்று மனோஜ் சொல்ல ரோகிணி இன்னும் கன்ஃபார்ம் கூட ஆகல அதுக்குள்ள குழந்தை வேண்டாம் என்று பேச ஆரம்பிச்சுட்டேன் என்று கோபப்பட்டு நீ கெளம்பு என்று சொல்கிறார்.

மனோஜ் எங்க போகணும் என்று கேட்க இன்டர்வியூக்கு அதான் உனக்கு ஒரு கம்பெனி அட்ரஸ் அனுப்பி இருக்கல என்று சொல்லி பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறார். மேலும் வித்யாவுடன் நான் செக்கப் போகிறேன் என்று சொல்கிறார்.

அடுத்ததாக வித்யாவிடம் கர்ப்பம் எல்லாம் இல்ல அப்போதைக்கு தப்பிக்கிறதுக்காக பொய் சொன்னேன் என உண்மையை உடைக்கிறார். வீட்டில் விஜயா ரோகினி கர்ப்பம் என மிகுந்த சந்தோஷத்தில் இங்கும் அங்கும் உலாத்திக் கொண்டிருக்கிறார். ரோகினி முகத்தை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருந்தது என்று அண்ணாமலையிடம் பேச டாக்டர் சொல்லட்டும் அதுக்கப்புறம் பேசிக்கலாம் என்று கூறுகிறார்.

பார்வதி மாங்காயோடு வர விஜயா சந்தோஷத்தை வெளிப்படுத்தி மாங்காவை எடுத்துட்டு போக சொல்லி மீனாவை கூப்பிட கீழே கொட்டிய மாங்காவில் காலை வைத்த மீனா வழுக்கி கொண்டே போக முத்து தாங்கி பிடிக்கிறார். ‌ இதைப் பார்த்து விஜயா காண்டாகிறார்.

பிறகு ரோகிணி மற்றும் மனோஜ் வீட்டுக்கு வர விஜயா டாக்டர் என்ன சொன்னாங்க கன்ஃபார்ம் தானே? என கேட்கிறார் ரோகினி டல்லாகவே இருக்க என்னம்மா சக்தி இல்லைன்னு சொன்னாங்க நீ ஒன்னும் கவலைப்படாதே குழந்தை பிறக்குறதுக்குள்ள நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்திடலாம் என்று சொல்கிறார்‌. பிறகு ரோகிணி கர்ப்பம் இல்லை என்று உண்மையை உடைக்க விஜயா ஏமாற்றமடைய மனோஜ் சிரித்துக்கொண்டே சந்தோஷமாக நிற்கிறார்.

மீனா ரோகிணியிடம் நான் கூட ரொம்ப சந்தோஷமா ஆவலோடு எதிர்பார்த்து இருந்தேன். சரி நீங்க கவலைப்படாதீங்க சீக்கிரம் நல்லது நடக்கும் என சொல்ல எல்லாம் நீ என்ன வேண்டி இருப்பது எனக்கு தெரியும் என்று விஜய்யா கோபப்பட அண்ணாமலை தேவையில்லாம அவசரப்பட்டு எல்லாத்தையும் பேசினது நீ என்று திட்டுகிறார்.

மனோஜ் சந்தோஷமாக இருப்பதை பார்த்த முத்து கோர்த்து விட என்னடா இப்போ எனக்கும் கவலை தான் இன்னைக்கு இல்லன்னா இன்னொரு நாள் நடக்க போகுது என்று ரோகிணியை கூப்பிட்டுக் கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.

பிறகு ரூமுக்கு வந்த வித்யா எனக்கு ரோகிணி கர்ப்பம் ஆகாதது கூட பிரச்சனை இல்ல அந்த மீனா முதல்ல கர்ப்பம் ஆகிடவே கூடாது. ஸ்ருதி கர்ப்பமானால் கூட பரவால்ல என்று பேச அதான் ஸ்ருதி அவங்க அம்மா வீட்ல இருக்காளே இப்படியே விட்டால் இடைவெளி ஆகிடும் பேசி வீட்டுக்கு வர சொல்லு என்று சொன்னதும் விஜயா ஸ்ருதிக்கு ஃபோன் பண்ணுகிறார். எனக்கு உன் ஞாபகமாகவும் ரவி ஞாபகமாகவும் இருக்கு என்று சொல்ல சுருதி தாலி பிரித்து போடும் பங்க்ஷனில் எடுத்த போட்டோவை அனுப்பி போட்டோ அனுப்பி இருக்கேன் பார்த்துக்கோங்க என்று சொல்கிறார்.

முத்து பண்ணது தப்புதான் அவன் ஒரு முரடன் அவன் பண்ணது எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத, வீட்டுக்கு வாமா என்று சொல்லி கூப்பிட சுருதி என் அப்பா வடிச்சவன் இருக்கிற வீட்டுக்கு என்னால வர முடியாது என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 05-04-24
jothika lakshu

Recent Posts

மாயக்கூத்து தமிழ் சினிமாவின் லோ பட்ஜெட்டில் ஒரு தரமான முயற்சி! இந்த வாரம் உங்கள் டெண்ட்கோட்டா OTT தளத்தில்

எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில்…

14 minutes ago

கிஸ் : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக…

5 hours ago

சூர்யா நடிக்கும் கருப்பு படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!

சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது…

6 hours ago

ஜனநாயகன் : ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

6 hours ago

மீனாவுக்கு வந்த ஐடியா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

8 hours ago

சுந்தரவல்லி கேட்ட கேள்வி கண் முழித்து கலங்கிய நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

8 hours ago