முத்து மீது கோபத்தில் பாட்டி. அதிர்ச்சியில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. அதிகாலையில் எழுந்து மீனா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க இதை பார்த்த பாட்டி இவ என்ன காலையிலேயே எழுந்து இந்த வேலையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா? முத்து என்ன பண்ணிட்டு இருக்கான் என்று உள்ளே போய் பார்க்க தரையில் தாத்தாவின் வேட்டியை விரித்து போட்டு படுத்து கொண்டிருக்க பாட்டி டம்ளர்-ஐ தூக்கி போட்டு அவனை எழுப்புகிறார்.

இதனைத் தொடர்ந்து முத்து தாத்தாவோட வேட்டிய போத்திக்கிட்டு படுத்ததனால அவர் நெஞ்சு மேல என்னை தூக்கிப்போட்டு வளர்த்ததெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது தாத்தா மேலயே படுத்து தூங்குன மாதிரி இருந்தது என சொல்ல பாட்டி கடுப்பாகி திட்டுகிறார்.

பிறகு முத்து பாட்டியிடம் காபி கேட்க மீனா நான் போட்டு தரேனு சொல்ல பாட்டியோட கையில பாட்டி ஸ்டைல தான் வேணும் என சொல்கிறார். பிறகு முத்து பல் துலக்க வெளியே செல்ல பாட்டி விட்டத்தை பார்த்து இவனுக்கு நல்ல புத்தி கொடுங்க என கணவனிடம் வேண்டுகிறார். இதைப் பார்த்த முத்து பாட்டியை கிண்டல் அடிக்கிறார். பிறகு பாட்டி மீனாவை கூட்டிகிட்டு பச்சையம்மன் கோவிலுக்கு போயிட்டு வா என சொல்கிறார்.

மறுபக்கம் அண்ணாமலை, மனோஜ், ரோகினி, விஜயா, பார்வதி என எல்லோரும் கோவிலுக்கு வந்து பத்திரிக்கை வைத்து பூஜை செய்கின்றனர். பிறகு முதல் பத்திரிக்கை ரோகிணி கையில் கொடுக்க பார்வதி அப்பாவை பற்றி கேட்க ரோகினி அவர் பத்தி பேச வேண்டாம் என சொல்லி விடுகிறார். அதன் பிறகு பத்திரிக்கையை வாங்கி கண்கலங்கியபடி விஜயாவை கட்டிப்பிடித்து மனோஜுடன் கடைக்கு கிளம்புகிறார் ரோகிணி.

இதைத் தொடர்ந்து அண்ணாமலை கோவிலை சுற்ற போக பார்வதி விஜயாவிடம் பொண்ணுக்கு நீ என்ன செய்யப் போற என்று கேட்க அதான் 10 லட்சம் ரூபாய் பணத்தை தூக்கி கொடுத்து இருக்கேனே என விஜயா சொல்கிறார். விஜயாவோட அப்பா வந்து பார்த்தா நாமளும் அவருடைய கௌரவத்திற்கு ஏதாவது பண்ணி இருக்கணும் இல்ல, நீ 10 சவரன் நகை செஞ்சு போடு என சொல்ல விஜயா பணத்துக்கு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்.

வீட்டுக்கு வந்த விஜயா அண்ணாமலையிடம் ரோகினிக்கு 10 சவரன் நகை செஞ்சு போடணும் என சொல்ல கையில் பணம் இல்லை, இருக்கிறது வீட்டு பத்திரம் ஒன்னு தான் அதை எடுத்து வச்சு பணத்தை வாங்கலாம் என பத்திரத்தை எடுக்க போக விஜயா பதறிப் போய் அவரை தடுத்து நிறுத்தி வீட்டு பத்திரத்தை வைத்து பணம் வாங்க வேண்டாம் அதனால பிள்ளைகளுக்குள்ள சண்டை வரும் என திசை மாற்றுகிறார்.

அப்போ வேற என்னதான் பண்றது என கேட்க அதான் உங்க அம்மாவுக்கு குத்தகை பணம் வந்து இருக்கு இல்ல, அதைக் கேட்டு வாங்குங்க என சொல்ல நான் கேட்க மாட்டேன், நான் உன்னை ஊருக்கு கூட்டிட்டு போறேன் நீ கேட்டு வாங்கிங்க என்று சொல்ல விஜயா நான் வரமாட்டேன் என சொல்கிறார். எங்க அம்மா வேணாம் ஆனா அவங்களுடைய பணம் மட்டும் வேணுமா என அண்ணாமலை திட்டி விட்டு நீ கேட்டு வாங்குவதாக இருந்தால் சொல்லு இல்ல அதை பத்தி பேசாத என ஷாக் கொடுக்கிறார்.

இதை தொடர்ந்து ரோகிணி காஸ்ட்லியான பட்டு புடவை தேர்வு செய்து வைக்க அதை பார்த்த அவளது தோழி இதெல்லாம் உன் மாமியார் உங்கள் அப்பா பணக்காரர் என நினைத்து செய்றாங்க உண்மை தெரிஞ்சா என்ன ஆகும் என்று யோசி என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragaddikka asai-episode-update
jothika lakshu

Recent Posts

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

7 hours ago

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

7 hours ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

8 hours ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

14 hours ago

Thangarathinamey – Video Song

https://youtu.be/apxygLROFF0?si=XIwXjw6_VBRTI9AW

14 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி.. இயக்குனர் அமீர் கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…

15 hours ago