simbu-vtk-movie-fans-compare-vijay-movie
கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை நடிகர் விஜயின் நெஞ்சினிலே என்ற திரைப்படத்துடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
அதாவது 1999 ஆம் ஆண்டு வெளியான விஜயின் நெஞ்சினிலே திரைப்படத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக மும்பைக்கு வேலைக்காக செல்லும் விஜய், அங்கு ஒரு கும்பலிடம் அடியாளாக வேலை செய்து குடும்பத்திற்கு பணம் அனுப்புவார். அதே போல் இந்தப் படத்திலும் மும்பை செல்லும் சிம்பு அங்கு அடியாள் கும்பலிடம் வேலைக்கு சேர்வதாக அமைக்கப்பட்டிக்கும் காட்சிகளை, நெஞ்சினிலே படத்துடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். தற்போது இந்த அதிர்ச்சியான லேட்டஸ்ட் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Blast Official Trailer | Arjun, Preity Mukundhan, Abhirami | Ravi Basrur | Subash K Raj…
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…
டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…