simbu-movie latest update
‘மாநாடு’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிம்புவின் நடிப்பில் திரையில் வெளிவர தயாராக இருக்கும் படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏற்கனவே இவர்களின் காம்போவில் வெளியான படங்களான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதனால் மீண்டும் இவர்களின் கூட்டணியில் உருவாகி இருக்கும் படத்தை பார்ப்பதற்கு ரசிகர் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் கயாடு லோக்கர் மற்றும் சித்தி இட்னானி என்று இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ‘வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்’ சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்திற்கான டீசர் வெளியாகி ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில். இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரவபூர்வமான அறிவுப்பை வெளியிட்டு இருந்தனர். தற்போது இப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடுவதற்கான முழு உரிமையை பிரபல விநியோக நிறுவனமான “United India Exporters” நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அந்நிறுவனம் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…
‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும்…
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…