சினிமா பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது – நடிகை சுருதிஹாசன் வருத்தம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுருதிஹாசன். இவர் பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடிகர் சிரஞ்சீவி, நடிகர் பாலகிருஷ்ணா போன்ற பல மூத்த நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் அவர் மூத்த நடிகர்களுடன் நடிப்பதை சிலர் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு சுருதிஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுருதிஹாசன் கூறியதாவது, “நானும் என் நண்பர் சந்தனுவும் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம். அதை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. காதல் திருமணம் போன்ற விஷயங்களைப் பேசுவதில் எனக்கு இஷ்டம் இல்லை. சினிமாவிற்கு வந்த புதிதில் நடிப்பு, சினிமா பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அப்போது நான் இசைத்துறையில் மட்டுமே இருந்தேன். எதிர்பாராமல் நடிகையாக மாற வேண்டியிருந்தது. நானும் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன் என்றால் ஆச்சரியம்தான்.

நடிகர் சிரஞ்சீவி, நடிகர் பாலகிருஷ்ணா போன்ற மூத்த கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டதை சிலர் விமர்சிக்கின்றனர். கதை, கதாபாத்திரம் பிடித்தால் மூத்த நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன். நான் சினிமாவில் புதிய முயற்சிகள் செய்யும் ஒவ்வொரு முறையும் எத்தனையோ சந்தேகங்களை வெளிப்படுத்தி என்னை பயமுறுத்தினார்கள். நான் பயப்படாமல் எதை செய்ய வேண்டுமோ அதையே செய்தேன். பாலகிருஷ்ணா படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்றார்.

Suresh

Recent Posts

திட்டம் போட்டு வாத்தியாரை அனுப்பிய சுந்தரவல்லி.. வருத்தப்பட்ட நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

முத்து மீது கோபப்பட்ட மீனா.. ஸ்ருதி ரவிக்கு வந்த புதிய சிக்கல்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

3 hours ago

சூர்யா கொடுத்த வார்னிங்.. மாதவி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago

அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் சிங்கம் புலி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

20 hours ago

சிம்பு குறித்து பேசிய நடிகர் கென் கருணாஸ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…

20 hours ago

வெற்றிமாறன் எழுதிய முதல் கதை அரசன்.. இயக்குனர் ராம் ஓபன் டாக்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…

21 hours ago