Shivani Narayanan and Vetri to work together
பகல் நிலவு சீரியலில் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு கமல்-விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் படத்தில் ஒப்பந்தமாகியதாக தகவல் வெளியானது. இவர் தற்போது சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமாகி ஜீவி போன்ற சில படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் வெற்றியுடன் அடுத்த படத்தில் கைகோர்த்திருக்கிறார். அறிமுக இயக்குனர் செல்வக்குமார் இயக்கும் இப்படத்திற்கு பம்பர் என பெயரிட்டுள்ளனர்.
கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்டு ‘பம்பர்’ திரைப்படம் உருவாகிவருவதாக கூறப்படுகிறது. வேதா பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தபடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலத்தை சுற்றி படமாக்கியுள்ளதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். வெற்றி, ஷிவானியுடன் இணைந்து ஹரீஷ் பேரடி, தங்கதுரை போன்ற பலர் நடிக்கின்றனர்.
கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுதுகிறார். ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி இணைந்திருக்கிறார்.
மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1
பைசன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…