shivangi-latest-reel-video viral
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாங்கி தனது பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையாடித்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று சிவாங்கி தனது நகைச்சுவையினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது மட்டுமின்றி தனக்கென தனி இடத்தையும் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.
தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று இருக்கும் சிவாங்கி இதற்கிடையே சில படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வடிவேலுக்கு மகளாக “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தில் தற்போது நடித்துகொண்டிருக்கும் சிவாங்கி அடுத்தடுத்த புதிய படங்களிலும் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் அதிக ஃபாலோவர்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருக்கும் சிவாங்கி அடிக்கடி அவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது சொடக்கு போட்டு கொண்டு பல ஆடைகளை மாற்றிக் காட்டும் சூப்பரான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…
கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், மர்மங்கள், காதல், நகைச்சுவை என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. கல்லூரியில்…
பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் இன்று காலை காலமானதாக வெளியான செய்தி, திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…