senthil-join-in-rajinikanth-movie
இந்திய திரையுலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருக்கிறார்.
விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் செந்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரஜினி மற்றும் செந்திலின் காம்போ இணைந்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…