Seenu Ramasamy reveals maamanithan update
சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆனாலும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது.
இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மாமனிதன் தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை முறைப்படி யுவன் சங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார்.
ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில் வெளியாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, நாற்பதைக் கடந்த பிறகும் தனது இளமையான தோற்றம் மற்றும் உடற்தகுதியால் ரசிகர்களை…
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும்…
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த…
'சீயான்' விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருக்கும்…