Seenu Ramasamy confers new degree on GV Prakash
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘இடிமுழக்கம்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், “இடிமுழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது, திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமிக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் பதிவுக்கு பதிலளித்து டுவிட் செய்திருந்த இயக்குனர் சீனு ராமசாமி, ஜி.வி.பிரகாஷுக்கு ‘வெற்றித்தமிழன்’ என்ற புது பட்டத்தை கொடுத்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’, உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மக்கள் அன்பன்’ ஆகிய பட்டங்களை கொடுத்ததும் சீனு ராமசாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…