seenu ramasamy about maamanithan movie
“தர்மதுரை” படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம்தான் “மாமனிதன்”. இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் சார்பாக இவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படம் தொடர்ந்து பலரின் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக இயக்குனர் சீனு ராமசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நேர்காணலில் கலந்துகொண்டு, பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சீனு ராமசாமியிடம் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோ நடிப்பதாக இருந்தால் யார் நடித்திருப்பார்? என்ற கேள்வியை கேட்டுள்ளார். இதற்கு சீனு ராமசாமி அவர்கள் நான் முதன் முதலில் இந்த கதாபாத்திரத்தில் ‘அஜித்தை’ நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால், அது நடக்கவில்லை என்று கூறியுள்ளார். தற்போது இவர் அளித்துள்ள இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…