இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் : ‘தி வெர்டிக்ட்’ படத்தின் செகண்ட் சிங்கிள் தள்ளிவைப்பு..!

தி வெர்டிக்ட்’ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீட்டுத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தி வெர்டிக்ட்’.

அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரித்துள்ளார்.

மேலும் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யூலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றி உள்ளனர். ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சரத்குமார் வெளியிட்டிருந்த நிலையில்,ஃபர்ஸ்ட் சிங்கிளை மதன் கார்க்கி வெளியிட்டிருந்தார்.
இந்தப் படத்தின் டீசரை குஷ்பூ வெளியிட்டு இருந்தார். இந்த மூன்றும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது . அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக அதிகரித்து இருந்தது.

இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அதில் “திருடா” என்ற பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிலவிவரும் போர்ப் பதற்றம் காரணமாக செகண்ட் சிங்கிள் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு மே மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

Second single from ‘The Verdict’ postponed
jothika lakshu

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

59 minutes ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

1 hour ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

1 hour ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

2 hours ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

3 hours ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

4 hours ago