திரைத்துறைக்கு ஈடில்லா இழப்பை ஏற்படுத்தி மறைந்த சித்திக்.. சரத்குமார் வேதனை

பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், ‘சாது மிரண்டா’, ‘காவலன்’ படத்தையும் இயக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் சித்திக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சரத்குமார், இயக்குனர் சித்திக்கிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “பிரபல மலையாள இயக்குனரும், தமிழில் சிறந்த படங்களை இயக்கியவரும், சிறந்த திரைப்பட எழுத்தாளருமான சித்திக் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. திரைத்துறைக்கு ஈடில்லா இழப்பை ஏற்படுத்தி மறைந்த சித்திக் பிரிவால் வேதனையில் வாடும், அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Suresh

Recent Posts

அருணிடம் விஷயத்தை சொன்ன சீதா.. முத்து எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…

1 hour ago

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

18 hours ago

இட்லி கடை திரைவிமர்சனம்

தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…

18 hours ago

விருது வாங்கிய ஜீவி பிரகாஷிற்கு ஏ ஆர் ரகுமானின் அன்பு பரிசு..!

ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…

21 hours ago

மருமகள் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான புதிய நேரம்.!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…

23 hours ago

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

24 hours ago