Santhanam has turned down the opportunity to act with Sivakarthikeyan!
தொலைக்காட்சியில் இருந்து பெரிய திரையில் அறிமுகமாகி பெரியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தான் சந்தானம்.
ஆரம்பத்தில் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சந்தானம், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான லூலு சபா நிகழ்ச்சியில் வந்து தனது திறமையை நிரூபித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி கொண்டார்.
பின்னர் சிம்பு இயக்கிய மன்மதன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சந்தானம், அடுத்தடுத்த திரைப்படங்களில் காமெடியனாக அசத்தி காமெடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு பிரபலமானார் சந்தானம்.
சந்தானம் காமெடியனாக பிரபலமான சமயத்தில் தான் அதே விஜய் டிவி-யின் மூலம் பிரபலமாகி வந்தார் சிவகார்த்திகேயன். அவரும் திரையுலகில் அறிமுகமாகி இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார்.
இதனிடையே சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன் இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை. ஒன்றாக நடிக்கவிருந்த படத்தையும் சந்தானம் தட்டி கழித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி சந்தானம் மற்றும் சிவா நடிப்பில் வெளியான யாயா படத்தில் முதலில் சிவா கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தான் நடித்திருக்க வேண்டியதாம். ஆனால் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என சந்தானம் கூறியதாக கூறப்பட்டது.
அதேபோல் ராஜா ராணி படத்திலும் ஜெய்க்கு பதிலாக சிவகார்த்திகேயன் தான் நடிப்பதாக இருந்ததாகவும், சந்தானம் நடிக்க மாட்டேன் என்றதால் அப்படத்தில் ஜெய் நடித்ததாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் பல காரணங்களால் இரண்டு திறமை வாய்த்த இந்த நட்சத்திரங்கள் ஒன்றாக நடிக்க முடியாமல் போய்விட்டது, இவர்கள் ஒரே படத்தில் நடிப்பது என்பது ரசிகர்களின் ஆசை. அப்படி அவர்கள் நடித்திருந்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் அது விருந்தாக அமைந்திருக்கும்.
முருங்கைக் கீரை பொரியல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில்…
கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக…
சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது…
ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…