தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் இன்னும் இரண்டு படங்களோடு சினிமா வாழ்க்கைக்கு டாட்டா சொல்லி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சி வழிநடத்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
இவருடைய அரசியல் பயணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் இயக்குனர் சமுத்திரகனியும் இது குறித்து பேசி உள்ளார்.
விஜய் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அவர் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வருவது பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன்.
அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நான் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன். அதற்காக அவர் என்னை கூப்பிட வேண்டும் என்கிற அவசியமெல்லாம் இல்லை. நல்ல விஷயங்களுக்காக நான் எப்போதும் உடன் நிற்பேன் என தெரிவித்துள்ளார்.
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…