Samantha puts an end to the controversy
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தார்கள்.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் பிரியப் போவதாக வெகுநாட்களாகவே செய்திகள் உலவுகிறது. இதுதவிர தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் நடிகை சமந்தா, விரைவில் மும்பைக்கு குடியேர உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சமந்தா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், ‘நீங்கள் நிஜமாகவே மும்பைக்கு மாற இருக்குறீர்களா’ எனக் கேட்டார்.
இதற்கு “எப்படி இந்த வதந்தி பரவியது எனத் தெரியவில்லை. மற்ற நூறு வதந்திகளைப் போல இதுவும் உண்மையில்லை. எப்போதுமே எனக்கு ஐதராபாத் தான் வீடு. எனக்கு ஒவ்வொன்றையும் வழங்கியது ஐதராபாத் தான், நான் இங்கு தான் வசிப்பேன்” என பதிலளித்தார் சமந்தா.
இந்த கலந்துரையாடலின் போது, நடிகை சமந்தா, விவாகரத்து விவகாரம் குறித்த எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…