samantha deleted tweet
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.
இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டனர். தங்கள் இன்ஸ்டாகிராம் பதிவில், “நீண்ட ஆலோசனைக்கு பிறகு, எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம்.10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம், அது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்தது. எப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம்’ என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த செய்தி இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே பிரிவு என்பது பரவாயில்லை. ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அவரவர்களின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும் என நாக சைதன்யா கூறினார். மேலும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தாதான் என நாக சைதன்யா கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை தற்போது நீக்கியுள்ளார். இதனால் இருவரும் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி பற்றி…
ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறியுள்ளார் ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத்…
இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…