தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் சுதா. இவர் கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார்.
இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கி பழகி வந்தாராம் ஷியாம் கே நாயுடு.
ஆனால் வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இதையடுத்து ஷியாம் தன்னை ஏமாற்றியதாக கூறி நடிகை சாய் சுதா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து போலீசார் ஷியாம் கே.நாயுடுவை கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் ஸ்ரீசுதாவும் தானும் தங்கள் பிரச்சனையில் சாமாதானமாக போக முடிவுசெய்து விட்டோம் என கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஷியாம் கே.நாயுடு சில ஆவணங்களையும் சமர்ப்பித்தாராம்.
ஆனால் அந்த ஆவணங்களில் இருந்த ஸ்ரீசுதாவின் கையெழுத்து போலியானது என்பது தெரியவந்தது. இதனால் மோசடி மற்றும் ஏமாற்றுதல் என்கிற பிரிவுகளில் மீண்டும் ஷியாம் கே.நாயுடு மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…