Rose water for face wash
நம் முகத்தை பொலிவாகவும் மெருகேற்றவும் நினைத்தால் ரோஸ் வாட்டர் மிகவும் சிறந்தது.
முகம் சோர்வாக இருக்கும் போது நாம் பல கெமிக்கல்கள் கலந்த கிரீம் மற்றும் ஃபேசியல் செய்து கொள்வோம் ஆனால் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தை அழகாக மாற்றுவது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
நாம் பயன்படுத்தக்கூடிய ரோஸ் வாட்டரை வீட்டிலேயே தயாரித்தால் இன்னும் சிறப்பு. முதலில் ரோஜா இதழ்களை எடுத்துக்கொண்டு நன்றாக உலர்த்தி ஒரு கப் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பானையில் இதழ்கள் மற்றும் தண்ணீரை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். அது நன்றாக கொதித்து இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பின் குளிர வைக்கவும். பிறகு வடிகட்டி இதழ்களை வெளியேற்றி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் வைத்து தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரோஸ் வாட்டரை நாம் காலை மாலை என்று இரண்டு வேலைகளிலும் பயன்படுத்துவது பற்றி பார்க்கலாம். ஒரு காட்டன் உதவியுடன் ரோஸ் வாட்டரை முகம் முழுவதும் தடவி விட வேண்டும்.
அப்படி செய்வதன் மூலம் முகத்திற்கு ஆக்சிஜன் கிடைத்து பளபளப்பாக இருக்க பெருமளவில் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் முல்தானி மிட்டியை சாதாரண நீரில் ஊறவைத்து பிறகு அதில் எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி இரண்டு நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் எந்த வித பிரச்சனையும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசாயனம் கலந்த ஃபேஸ்வாஷ் மற்றும் ஸ்க்ரப் வாங்குவதைவிட நம் வீட்டிலேயே தயாரித்த ரோஸ் வாட்டரை பயன்படுத்தி முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வது நல்லது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…