romeo movie review
வாலிப வயதில் தன் காதலை தொலைத்த ஒருவர், திருமண வயதில் காதலை தேடும் கதை.
நாயகன் விஜய் ஆண்டனி வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தென்காசி ஊருக்கு வருகிறார். 35 வயதான இவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள்.ஆனால், இவரோ காதலித்து தான் திருமணம் செய்வேன் என்று கூறுகிறார்.
இந்நிலையில் சென்னையில் பெரிய நடிகையாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் மிருணாளினி ரவி, தாத்தா மறைவுக்கு தென்காசிக்கு வருகிறார். இவரை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விஜய் ஆண்டனி. இவரை திருமணம் செய்ய விஜய் ஆண்டனி ஆசைப்படுகிறார்.
முதலில் திருமணத்தை மறுக்கும் மிருணாளினி ரவி, ஒரு கட்டத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறார். திருமணம் ஆன மறுநாளே விஜய் ஆண்டனியிடம் இருந்து விவாகரத்து கேட்கிறார் மிருணாளினி. இறுதியில் விஜய் ஆண்டனியிடம் இருந்து மிருணாளினி விவாகரத்து கேட்க காரணம் என்ன? விஜய் ஆண்டனி விவாகரத்து கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். மனைவியை காதலிக்க இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக நடிகராக மாறும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகி மிருணாளினிக்கு நடிக்க அதிகம் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். விஜய் ஆண்டனியின் காதலுக்கு உதவுபவராக வரும் யோகி பாபு ஒரு சில இடங்களில் மட்டுமே ஸ்கோர் செய்து இருக்கிறார். விடிவி கணேஷ், இளவரசு, ஷா ரா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
வாலிப வயதில் தன் காதலை தொலைத்த ஒருவர், திருமண வயதில் காதலை தேடுவதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன். ஓரளவிற்கு திரைக்கதை ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது என்றே சொல்லலாம். இரண்டாம் பாதி திரைக்கதை கொஞ்சம் மெதுவாக செல்கிறது. அதுபோல் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகளையும் வைத்து இருக்கலாம்.
பரத் தனசேகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது.
பருக் ஜே பாஷாவின் ஒளிப்பதிவு சிறப்பு. வெளிநாடு, கிராமம், சிட்டி என அழகாக இவரது கேமரா படம் பிடித்து இருக்கிறது.
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…