பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தை தமிழில் ரீமேக் செய்யும் ஆர்.ஜே. பாலாஜி

பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை அவரே இயக்கவும் உள்ளாராம். ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என்று தலைப்பு வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே தலைப்பில் பாக்யராஜ் ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ள நிலையில், இந்த தலைப்புக்காக ஆர்.ஜே.பாலாஜி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

என் படங்களை பார்த்து அமீர்கான் பாராட்டினார்! – விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் தனது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லான 25-வது படம் குறித்த முக்கிய…

16 hours ago

கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

16 hours ago

பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உருவாகிவிட்டதா? அறந்தாங்கி நிஷா ஆவேசம்

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…

16 hours ago

பெத்தி திரைப்படம் இந்திய வசூல் மட்டும் இத்தனை கோடிகளா?

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’…

16 hours ago

சென்சார் குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை – இயக்குநர் கே பாக்கியராஜ்

இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

16 hours ago

Vengaatu Boomyil Lyrical Video

Vengaatu Boomyil Lyrical Video | Black Gold | Vetri, Priyalaya | Gavaskar Avinash | Saindhavi

18 hours ago