தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ரியா விஸ்வநாதன்.
நாளுக்கு நாள் ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென ரியா விஸ்வநாதன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
ரியாவுக்கு பதிலாக தற்போது ஆஷா கௌடா நாயகியாக நடிக்க தொடங்கியுள்ள நிலையில் தன்னிடம் எதுவும் சொல்லாமல் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து தன்னை வெளியேற்றி விட்டதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரியப்படுத்தி இருந்தார் ரியா.
இப்படியான நிலையில் ரியா விஸ்வநாதன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சீரியலுக்கு சண்டைக்கோழி என டைட்டில் வைத்திருப்பதாகவும் இரட்டை ரோஜா சீரியலுக்கு பதில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
வெகுவிரைவில் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…
மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…