சூர்யாவின் தந்தை ஜோஜு ஜார்ஜின் தொழிற்சாலையில் வாட்ச் மேனாக வேலைப்பார்த்து வருகிறார். ஒரு நாள் திடீரென அவர் இறந்து விடுகிறார். குழந்தை இல்லாத ஜோஜு ஜார்ஜ் தம்பதி சூர்யாவை எடுத்து வளர்க்கின்றனர். தன் தந்தையின் இறப்பை நேரில் பார்த்ததால் அதில் பாதிப்படைந்து சிறுவயதில் இருந்தே சூர்யாவிற்கு சிரிப்பு வராமல் இருக்கிறது.தொடக்க காலத்தில் ஜோஜு ஜார்ஜின் மனைவி மட்டும் தான் சூர்யா மீது அன்பாக இருக்கிறார். ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் மீது சிறு வெறுப்புடனே இருக்கிறார். சூர்யாவிற்கு பிடித்த விஷயத்தை செய்தால் அவருக்கு சிரிப்பு வரும் என கூறுகின்றனர் அதனால் இவருக்கு சண்டை பிடிப்பதனால் சூர்யா கராத்தே கற்றுக்கொள்கிறார். சிறுவயதில் இருந்தே தாய் இல்லாத பூஜா ஹெக்டே-வை சூர்யா காதலித்து வருகிறார். ஒரு கட்டத்தில் சூர்யா பெரிய கேங்ஸ்டர் ஆகும் சூழ்நிலையில். பூஜா ஹெக்டேவிற்காக சண்டை, யுத்தம், வன்முறை என அனைத்தையும் விட்டுவிட்டு திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார். ஆனால் திருமண நாள் அன்று இவரது வளர்ப்பு தந்தையான ஜோஜு ஜார்ஜ் கும்பலுடன் சண்டை ஏற்படுகிறது. இதில் சூர்யா ஒரு கொலை செய்ததால் சிறைக்கு செல்கிறார். பூஜா ஹெக்டே சூர்யாவை வெறுத்துவிட்டு அவரை விட்டு பிரிகிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது? சூர்யா விட நினைத்தாலும் அவரை விடாமல் துரத்தும் பிரச்சனை, வன்முறை என்ன? பூஜா ஹெக்டேவுடன் மீண்டும் இணைந்தாரா? முற்றிலும் வன்முறையை சூர்யாவால் கைவிட முடிந்ததா?நடிகர் சூர்யா அவரது கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்து நியாயம் சேர்த்துள்ளார். விண்டேஜ் சூர்யாவை ஸ்கிரீனில் பிரதிபளித்துள்ளார்.

அதுவும் குறிப்பாக கனிமா பாடல் இடம் பெற்ற சிங்கிள் ஷாட் காட்சியில் மிரட்டியுள்ளார். பூஜா ஹெக்டே அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சூர்யா – பூஜா இடையே உள்ள காதல் காட்சிகள் ரசிக்கும்படி உருவாகியுள்ளது.ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ் , கருணாகரன் ஆகியோர் அவர்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.இயக்கம்ஒரு மாறுபட்ட கேங்ஸ்டர் டிராமா கதைக்களம் கொண்ட படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். படத்தின் முதல் பாதி திரைக்கதையை மிக சிறப்பாக இயக்கியுள்ளார். கனிமா பாடல் காட்சிக்கு திரையரங்கே வைப் செய்கிறது. 16 நிமிட சிங்கிள் ஷாட் காட்சிக்கு பாராட்டுகள். பிளாஷ்பேக் காட்சிகளை சிறிது குறைத்திருக்கலாம். இரண்டாம் பாதியில் நேர அளவையும் சிறிது குறைத்திருந்தால் திரைப்படம் இன்னும் கூடுதலாக ரசித்து இருக்கலாம். சூர்யாவின் Swag n Style-ஐ திரையில் கொண்டுவந்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுகள். கண்டிப்பாக இப்படம் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு விருந்தென கூறலாம்.

படத்தின் அடுத்த நாயகனாக செயல் பட்டிருப்பவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், திரைக்கதை ஓட்டத்திற்கும் பெரிது உதவியுள்ளார். பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் அதும் கிளைமேக்ஸ் காட்சியில் தன் இசையால் கூஸ்பம்ஸ் செய்ய வைத்துள்ளார்.

ஷ்ரேயாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ரெட்ரோ ஸ்டைலில் கல்ர்ஃபுல்லாக பதிவு செய்துள்ளார். 16 நிமிட சிங்கிள் ஷாட்டை திறமையாக எடுத்ததற்கு பாராட்டுகள்.

Stone Bench Films & 2d entertainment இணைந்து நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.”,

jothika lakshu

Recent Posts

வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்களை பகிர்ந்த ஏ ஆர் ரகுமான்..!

ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார்…

1 hour ago

விக்ரம் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் விக்ரம் தற்போது விக்ரம் 63 மற்றும் 64 ஆகிய படங்களில்…

2 hours ago

தெலுங்கு படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்வதற்கான காரணத்தை கூறிய சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

2 hours ago

மன்னிப்பு கேட்க சொன்ன சூர்யா, மாதவியின் முடிவு என்ன? மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

சீதாவை சமாதானப்படுத்திய அருண், பயத்தில் கிருஷ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து,அருண்…

6 hours ago

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட காவியா அறிவுமணி..!

இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா…

1 week ago