சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகன் விஷால், சமுத்திரகனி அரவணைப்பில் வளர்கிறார். வேலூரில் எம்.எல்.ஏ. மற்றும் தாதாவாக இருக்கும் சமுத்திரகனி சொல்லும் வேலைகளை எல்லாம் விஷால் செய்து முடிக்கிறார். இந்நிலையில் வேலூருக்கு தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரை பார்த்தவுடன் அவர் பின்னாலே செல்கிறார்.தேர்வு எழுதும் நேரத்தில் பிரியா பவானி சங்கரை ஒரு கும்பல் தாக்க வருகிறது. அந்த கும்பலிடம் இருந்து அவரை விஷால் காப்பாற்றுகிறார். தொடர்ந்து பிரியா பவானி சங்கருக்கு அந்த கும்பல் மூலம் பிரச்சனை வருகிறது.இறுதியில் அந்த மர்ம கும்பல் யார்? பிரியா பவானி சங்கரை கொலை செய்ய துரத்த காரணம் என்ன? பிரியா பவானி சங்கரை விஷால் பாதுகாக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விஷால், சென்டிமென்ட், ஆக்ஷன், பாசம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக சிங்கிள் ஷாட் ஆக்ஷன் காட்சியில் சிறப்பாக நடித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கருக்கு நடிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்துள்ளது.

அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். குறிப்பாக விஷால் மீது அக்கறை காட்டும் இடத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார்.படத்திற்கு பெரிய பலம் சமுத்திரகனி நடிப்பு. விஷாலுக்காக இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது. பல காட்சிகளில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன். முரளி சர்மா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இவருக்கு உறுதுணையாக வரும் ஹரிஷ் பெரடி, முத்துகுமார் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.

இயக்கம் அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி. தன் படங்களுக்கு உண்டான அதே ஸ்டைலில் திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்து இருக்கிறார். கதாபாத்திரங்கள் இடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். சிங்கிள் ஷாட் ஆக்ஷன் மற்றும் காட்சிகள் வைத்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இசை தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.ஒளிப்பதிவு சுகுமாரியின் ஒளிப்பதிவை பாராட்டலாம். ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக படம் பிடித்து இருக்கிறார்.தயாரிப்புஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் சார்பாக கார்த்திகேயன் சந்தானம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

rathnam movie review
jothika lakshu

Recent Posts

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…

3 hours ago

“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?

"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…

3 hours ago

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…

4 hours ago

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…

4 hours ago

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்..

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…

4 hours ago

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…

21 hours ago