Rashmika's performance made me cringe - actor Karthi
ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா குறித்து நடிகர் கார்த்தி அளித்த பேட்டி வருமாறு: “என் படங்களான தீரன் ஒரு ரகம், கைதி ஒரு ரகமா இருக்க, அடுத்து சுல்தான் வருகிறது. சுல்தான் படத்தில் ராஷ்மிகா எனக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.
ராஷ்மிகா சரியான விளையாட்டுப் பெண். தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் எல்லாம் ஒரே மாதிரியா இருக்க. ஒரு கிராமத்து கதாபாத்திரத்துக்காக காத்திருந்து இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். நான்கு மொழிகள் பேசுகிறார்.
ராஷ்மிகாவுக்கு வட இந்தியாவிலும் ரசிகர்கள் உள்ளனர். படப்பிடிப்பில் லூட்டி அடித்தபடி இருப்பார். ஆனால், என்ன ஆச்சரியம்னா ஷாட்டுக்குள்ள வந்ததும், அது வரைக்கும் அடிச்ச லூட்டி மறைஞ்சு கேரக்டரா மாறி சரியா வசனம் பேசி அசத்துவார். அவரது நடிப்பு மலைக்க வைத்தது. ராஷ்மிகாவுக்கு இந்திய சினிமாவில் பெரிய எதிர்காலம் உள்ளது”. இவ்வாறு கார்த்தி கூறினார்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…