தொடரும் விமர்சனங்களால் வருத்தத்தில் ராஷ்மிகா.. வைரலாகும் ஷாக் தகவல்

தென்னிந்திய சினிமாவில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. தற்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக மாறியிருக்கும் இவர் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதன் பிறகு தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மீண்டும் தமிழ் தெலுங்கு என பழமொழிகளில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா தி ரைஸ் என்று அல்லு அர்ஜுனின் திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி பல ரசிகர்களின் மனதில் லேட்டஸ்ட் கிரஷ் ஆக வலம் வருகிறது. தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அப்படத்தை தொடர்ந்து புஷ்பா 2, மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் வரும் அக்டோபர் 7ஆம் தேதியான நாளை இந்தியில் வெளியாக இருக்கும் “குட் பை” என்ற திரைப்படத்தில் அமிதாபச்சன் உடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஷ்மிகா பேட்டியாளர்கள் கேட்டுக் கொண்டதால் தான் வாழ்நாளில் கடந்து வந்த சோகமான நிகழ்வுகள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நம்மை மீறிய செயல்கள் நடக்கும். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், அது சாத்தியம் கிடையாது. அந்தவகையில் எனது வாழ்க்கையில் சோகமான விஷயங்கள் பல நடந்துள்ளன.

எனது நடிப்பு சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை பற்றி கூறுகிறேன். ‘டியர் காம்ரேட்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தேன். இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் தேவரகொண்டாவுக்கு லிப் டு லிப் கிஸ் தர வேண்டும். கதைக்கு தேவை என்பதால், அதுபோல் கிஸ் கொடுத்து நடித்தேன். படம் வெளியான பிறகு, ரசிகர்கள் என்ற போர்வையில் பலபேர் என்னை சமூக வலைத்தளத்தில் இழிவாகப் பேசினார்கள். தரக்குறைவாக விமர்சித்தார்கள்.

அதற்கெல்லாம் இந்த முத்தக்காட்சியை காரணம் காட்டினார்கள். அதை எல்லாம் நான் படித்துவிட்டு மிகவும் அப்செட் ஆனேன். வீட்டிலுள்ள எனது அறைக்கு ஓடிச்சென்று, படுக்கையில் அழுதபடி கிடப்பேன். இதற்கு முன்பு யாருமே இது போன்ற காட்சியில் நடிக்கவில்லையா? என்னை மட்டும் ஏன் குறிவைத்து தாக்குகிறார்கள் என்பது புரியாமல் இருந்தது. அப்போதெல்லாம் விமர்சனங்களை மனதில் எடுத்துக்கொள்வேன். இப்போது எனக்குள் தைரியம் வந்திருக்கிறது. எப்படிப்பட்ட எதிர்மறை கருத்துகளையும் இப்போது கையாள தெரிந்துகொண்டேன். அதைஎல்லாம் நான் பேசாமலே கடந்து செல்கிறேன். அதனால்தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்.


rashmika-mandhana-sadly-to-speak-about-fans-negative-comments
jothika lakshu

Recent Posts

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

6 hours ago

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ்.??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…

9 hours ago

ஸ்ருதிக்கு வந்த ஐடியா, பிரச்சனையில் சிக்கிய சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…

9 hours ago

சபரி மற்றும் பார்வதி இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

9 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, சுந்தரவள்ளி முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

12 hours ago

கனி கேட்ட கேள்வி, பார்வதி சொன்ன பதில், வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

12 hours ago