கோலிவுட் முதல் பாலிவுட் வரை குவியும் பட வாய்ப்பு…. பிசியான ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது நடிகை ராஷி கண்ணா, கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் கைவசம், அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உள்ளன. அதேபோல் தெலுங்கில் பக்கா கமர்ஷியல், தேங்க் யூ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர மலையாளத்தில் பிரம்மம், இந்தியில் 2 வெப் தொடர்கள், 2 படங்கள் என படு பிசியாக நடித்து வருகிறாராம். பட வாய்ப்பு குவிவதால், நடிகை ராஷி கண்ணா சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

கருப்பட்டி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!

கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

10 hours ago

நந்தினி குடும்பத்தை அசிங்கப்படுத்த நினைக்கும் மாதவி, சூர்யா கொடுத்த ஷாக், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

10 hours ago

விஜய் சேதுபதியிடம் கம்ப்ளைன்ட் பண்ண வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

13 hours ago

பைசன்: 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

15 hours ago

பேச வந்த கம்ருதீன்.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…

15 hours ago

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, போட்டியாளர்களின் பதில் என்ன? வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

15 hours ago