Ramya Krishnan
கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீஸார், அங்கு வந்த இன்னோவா காரை மறித்து, அதில் இருந்தவர்களிடம் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது அந்த காரில் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் சோதனையிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
சோதனையில் அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன. உடனே போலீஸார், இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.
சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் செல்வகுமாரை நடிகை ரம்யாகிருஷ்ணனும் அவரது சகோதரி வினயாகிருஷ்ணனும் பிணையில் அழைத்துச் சென்றனர்.
Ravana Tandavam Song | Ramayana | Ranbir, Yash | Namit M, Nitesh T | AR…
Patta Sarakku Lyrical Video - INK Movie | Anand Babu | Aishwarya | Chytanya Sankaran…
Ex Reunion Day Official Teaser | S Siva Krishna | Sterlin Nithya | SR Prabu
தமிழ்த் திரையுலகில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பின்னணிப் பாடகி ஜனனி. ‘அசல்’ படத்தின்…
‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் தற்காலிகமாக ‘D56’…
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான மமிதா பைஜு, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இணையத்தில் பரவிய…