ரஜினியின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது – பிரபல தயாரிப்பாளர் புகழாரம்

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இவர் ரஜினிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு… அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

வருடத்திற்கு ரஜினியின் இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால்தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர்களும் மகிழ்வார்கள்.

அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக்கிறது. இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங்களில் தேனை வார்க்கிறது.

ஒரு விநியோகஸ்தராக, ‘தங்கமகன்’, ’மூன்று முகம்’, படிக்காதவன்’, ’ஊர்க்காவலன்’, ’எஜமான்’, போன்ற அவரது நடிப்பில் வெளியான பல படங்ககளை நான் வெளியிட்டுள்ளேன்.

என்னைப் போலவே ரஜினியின் படங்களால் பலர் லாபம் சம்பாதித்துள்ளனர். அவருடனான எனது பழக்கம் 40 வருடங்களுக்கும் மேலானது. சினிமாவில் அவர் ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப் புதையல், அனைவராலும் போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

பூரண ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் நலத்தோடும், அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். சினிமாவின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.! வெல்டன் அண்ணாத்த.! என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Suresh

Recent Posts

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

42 minutes ago

இட்லி கடை திரைவிமர்சனம்

தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…

46 minutes ago

விருது வாங்கிய ஜீவி பிரகாஷிற்கு ஏ ஆர் ரகுமானின் அன்பு பரிசு..!

ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…

4 hours ago

மருமகள் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான புதிய நேரம்.!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…

6 hours ago

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

7 hours ago

ரோகினி போட்ட திட்டம், விஜயாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…

8 hours ago