வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து

வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்து வருகின்றன. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகின்றார்.

தற்போது, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு கமலின் தயாரிப்பில் உருவாகப்போகும் தலைவர் 173 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் ரஜனியும் சந்தித்துக்கொண்டனர். அப்போது நிகழ்ந்த உரையாடலை வைரமுத்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். பாசமுள்ள மனிதனப்பா, நான் மீசை வெச்ச குழந்தையப்பா’ என்ற வரிகளுக்கு இலக்கியமாக இருக்கின்றார் ரஜினி. உணவு முறை, உடல்நிலை குறித்து பேசிக்கொண்டிருந்த எங்களின் உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. தமிழகத்தின் அரசியல் குறித்தும் விவாதித்தோம், அதுமட்டுமல்லாமல் வடநாட்டு அரசியல் குறித்து அவர் பேசிய விஷயங்களால் நான் அசந்துபோய்விட்டேன், அவரிடம் அவ்வளவு தெளிவு உள்ளது,

அதோடு இல்லாமல் சினிமா பயணத்தில் அவரின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான திட்டத்தையும் கூறினார். குறித்துக் கொள்ளுங்கள், 2027 ஆம் ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு ஆண்டாக அமையும். அவரிடம் முதிர்ச்சி தெரிந்தாலும் முதுமை தெரியவில்லை.

‘இளமை இனிமேல் போகாது, முதுமை எனக்கு வாராது’ என்ற என் தமிழ் பொய்யாகவில்ல என பதிவிட்டுள்ளார் வைரமுத்து.

இந்தாண்டு ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் அடுத்தாண்டு தொடக்கத்தில் ‘தலைவர் 173’ படமும் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் கமலுடன் ரஜினி இணைந்து நடிக்கப்போகும் பட அறிவிப்பும் வெளியாக இருக்கின்றது. 75 வயதிலும் அசராது உழைக்கும் ரஜினி இளைஞர்களுக்கு முன்னுதாரணமே.!

Rajinikanth meets Vairamuthu: There is a buzz that there will be a turnaround in North Indian politics
dinesh kumar

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

9 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

9 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

9 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

10 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

11 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

16 hours ago