ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் பொன்னம்பலம். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனிலும் பங்கேற்றார்.
பொன்னம்பலத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நடிகர்கள் சரத்குமார், கமல்ஹாசன் ஆகியோர் பொன்னம்பலத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்துள்ளனர். இதுதவிர, பொன்னம்பலத்தின் 2 குழந்தைகளின் கல்வி செலவை கமல்ஹாசன் ஏற்றுள்ளார்.
இந்நிலையில் பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவ முன்வந்துள்ளார். இதுபற்றி பொன்னம்பலம் தரப்பில் கூறியதாவது: எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன.
இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் ஆகியோரின் படிப்பு செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc