Rajinikanth flexibility after watching 'Annaatthe' movie
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்பத்தினருடன் அண்ணாத்த படத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹூட் செயலியில் அவர் ஆடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: “என் குடும்பத்துடன் அண்ணாத்த படம் பார்த்தேன். குறிப்பாக என் பேரன் வேத், தியேட்டரில் பார்க்கும் முதல் படம் இது. அதனால் என் பக்கத்திலேயே உட்கார்ந்து முழு படத்தையும் ஆர்வமாக பார்த்தான். படம் முடிஞ்சதும் 3 நிமிஷம் என்னை கட்டிப்பிடிச்சுட்டு விடவே இல்ல… அவ்ளோ சந்தோஷம் அவனுக்கு, அதைப் பார்த்து எனக்கும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…