rajinikanth-baba-movie-is ready-for-re-release
இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் தனது 169 வது படத்தை நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் ரஜினியின் பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக இப்படத்திற்கான மறு படத்தொகுப்பு, கலர் கிரேட்டிங், ரீமிக்ஸ் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். சுரேஷ் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தின் ரீ-ரிலீசின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…