rajini-waved-to-fans-in-an-open-car-shooting-for-vettaiyan
“புதுச்சேரி:ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்கள்-அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசைய மைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கி றது.இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்த புரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.2 நாட்கள் தொடர்ந்து அங்கேயே ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் படப்படிப்பு நடந்தது. அப்போது கோவில் வளாகம், தெப்பக்குளம் பகுதியில் படம் பிடிக்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரஜினிகாந்த் சிறிது நேரம் புத்தகம் படித்தும் தியானமும் செய்தார்.படப்பிடிப்பு முடிந்ததும் அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் அவர்களை பார்த்து காரில் இருந்தபடியே கையசைத்து சென்றார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து தலைவா தலைவா என்று கூறி ஆரவாரம் செய்தனர்.”,
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…