Rajini, Vijay and Ajith are film actors who act with Srikanth
விக்ரம் நடித்த ‘தில்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதை தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்தார்.
இந்தநிலையில் தற்போது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘எக்கோ’ என்கிற படத்தில் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த ‘எக்கோ’வில் இதுவரை நாம் காணாத ஆசிஷ் வித்யார்த்தியை பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.
ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். தில், தூள், கில்லி, தடம் படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர்.
Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit…
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…