Rajini fans expressed their concern with a poster in Madurai
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதாக மும்முரமாக செயல்பட்டு வந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அரசியலில் இருந்து ஒதுங்க முடிவெடுத்தார்.
இந்த நிலையில் தற்போது மதுரையில் உள்ள மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் காக்கா குஞ்சுகளுக்கும் கள்ளச்சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம் தலைவா.. என்று பதிவிட்டு உள்ளனர்.
இது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்தின் டயலாக் ஆன வேதனை.. வெட்கம்.. அவமானம் என போட்டு காலம் பேசாது.. நிச்சயம் பதில் சொல்லும் களத்தில் சந்திப்போம் கதம்..கதம்..என பதிவிட்டு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
ஏற்கனவே தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் குறித்து ரசிகர்கள் பிரபலங்கள் என அவர்களது கருத்து தெரிவித்து வரும் நிலையில் ரஜினி ரசிகர்கள் இப்படி ஒரு போஸ்டரை ஒட்டி இருப்பது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…
மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
https://youtu.be/6QhTM9QuP_Y?si=x_3Upq3cwe4LKzmm
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…