கோச்சிங் கிளாஸ்க்கு செல்லும் சந்தியா.. முதல் நாளே வந்த பிரச்சனை.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அர்ச்சனா சிவகாமி சந்தியாவை சரவணனுடன் கடைக்குச் செல்ல சொன்னதை நினைத்து கடுப்பாகிறார். எல்லாருக்கும் நினைச்ச மாதிரி இந்த வீட்டில் நடக்குது ஆனா நான் நினைக்கிறது மட்டும் நடக்க மாட்டேங்குது என புலம்பும் நேரத்தில் சாமியார் ஆண் குழந்தைக்காக மருந்து வாங்கி கொடுத்து நினைவுக்கு வருகிறது. இதை வெளியிலே உணர்த்தி சாப்பிட சொன்னார் ஆனால் இந்த வீட்ல எப்படி இதை வெயிலில் உணர்த்துவதே என யோசித்து வீட்டின் பின்புறம் எடுத்துச் சென்று அதை வெயிலில் வைத்து நியூஸ் பேப்பர் வைத்து மறைத்து விடுகிறார்.

இதனையடுத்து சரவணனின் அப்பா இன்னைக்கு நியூஸ் பேப்பரில் காணோமே என பேப்பரை வைத்து அதன் பின் பக்கம் வந்து பார்க்க இங்கே பேப்பர் இருப்பதைப் பார்த்து எடுத்துக் கொள்கிறார். ‌ பிறகு அது பக்கத்தில் ஏதோ ஒரு டப்பாவில் எண்ணமோ இருக்கு என பார்த்து அதை விடுத்து வாசனை பிடிக்க வாசனை அருமையாக இருக்கிறது என கூறுகிறார்.

என்னவா இருக்கும்? எனக்கு தெரியாமல் யார் இதை மறைத்து வெச்சாங்க? எல்லாம் நாம சாப்பிடக் கூடாதுன்னு தான் இப்படி பண்ணி இருக்காங்க என அதை கொஞ்சம் டேஸ்ட் செய்து பார்க்க சூப்பராக இருக்கிறது என டப்பாவை தூக்கிக்கொண்டு சென்று உட்கார்ந்து கொள்கிறார். அதன் பிறகு அர்ச்சனா தண்ணீரை குடித்து விட்டு பின் பக்கம் வந்து பார்க்க மருந்தை காணவில்லை என அலற அதை தனது மாமனார் எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மாமா அது சாப்பிடற பொருள் இல்லை என சொல்லியும் சரவணனின் அப்பா தராமல் சாப்பிடுகிறார்.

அதன்பிறகு கொடுக்கறீங்களா இல்ல அத்தை கிட்ட சொல்லட்டுமா என்று சொன்னதும் பயந்து போய் கொடுத்து விடுகிறார். இதை சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரத்தில் அவர் வயிற்று வலியால் துடிக்கிறார். மேலும் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. அர்ச்சனா வைத்திருந்த இந்த லேகியத்தை சாப்பிட்டதால் தான் தனக்கு இப்படி ஆனது என்று புரிந்துகொண்டு அதை சிவகாமியிடம் சொல்ல முயற்சிக்க அர்ச்சனா உடனே நீங்க ஒரு கடையில பக்கோடா சாப்பிட்டதை நான் பார்த்த அது தான் உங்களுக்கு ஒத்துக்கல என சமாளித்து வருகிறார்.

அதன்பிறகு சரவணன் கடைசிக்கு கிளம்புவதாக சொல்ல சிவகாமி சந்தியாவை அழைத்துச் செல்ல சொல்கிறார். பிறகு சரவணன் சந்தியாவை கோச்சிங் கிளாசில் அழைத்துச் செல்ல வழியில் ஒருவர் போன் செய்து ஆர்டர் கொடுத்தது என்னாச்சு என கேட்க சந்தியா சரி நீங்க போய் வேலையை பாருங்க, நான் ஆட்டோவில் செல்கிறேன் என கூறுகிறார். பிறகு சந்தியா ஆட்டோ ஸ்டாண்ட் சென்று ஆட்டோவை கூப்பிட 300 ரூபாய் கேட்கின்றனர். வேண்டாம் என சந்தியா நடக்கத் தொடங்க ஒரு ஆட்டோக்காரர் 150 ரூபாய் கொடுங்க என என கூறுகிறார்.

ஆனால் சந்தியா அவரைப் பார்த்துவிட்டு தயக்கத்தோடு வேண்டாம் என சொல்ல அதெல்லாம் பயப்படாதீங்க வாங்க என ஆட்டோவில் அமர சொல்லி தவறான ரோட்டில் அழைத்துச் செல்கிறார். வேற ரூட்டில் போறீங்க என சந்தியா சொல்லியும் ஆட்டோக்காரன் இப்படி தெரியாத ரூட்டா? உட்காருங்க நான் கூட்டிட்டு போய் விடுறேன் என கூறுகிறார். ஆட்டோவில் சத்தமாக பாட்டு போட்டு சந்தியாவிடம் வழிந்து பேசுகிறார். ‌‌ இதனால் கிளாஸ்க்கு போகும் முதல் நாளே சந்தியா பிரச்சனையில் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani2 Serial Episode Update 30.03.22
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

8 hours ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

11 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

11 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

14 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

14 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

14 hours ago