சந்தியாவிற்கு சிவகாமி போட்ட கண்டிஷன்.. ஆதியால் கண் கலங்கிய அப்பா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் வள்ளி ஊருக்கு கிளம்ப அப்போது சந்தியா எப்போ இப்படி ஒரு குழந்தையை பெற்றுக் கொடுப்பாளோ? ஆனா அவ போலீசாக போறேன் ஊரை மிரட்ட போறேன்னு இருக்கா. போலீசான போஸ்டிங் எங்க வேணாலும் போடுவாங்களாம் ஆனா நீ அவளை இந்த தென்காசியை விட்டு அனுப்பக்கூடாது என கூறுகிறார். சிவகாமி நான் பாத்துக்குறேன் அத்தை என சொல்லி பிறகு வள்ளி ஊருக்கு கிளம்பியதும் அத்தை சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல. எக்காரணத்தைக் கொண்டும் தென்காசியை விட்டு போக கூடாது என சொல்ல வேறு வழியில்லாமல் சந்தியா ஒத்துக் கொள்கிறார்.

அதன் பிறகு சிவகாமி பார்வதியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அர்ச்சனா செக்கப் போரதா சொன்னா அவ கிளம்பிட்டாளா என கேட்க மயிலு அர்ச்சனாவை அழைத்து வர செந்திலை கூட்டிக்கொண்டு போவதாக சொல்ல பார்வதியை கூட்டிட்டு போக சொல்கிறார். ஆனால் அர்ச்சனா தயங்க அதன் பிறகு அவள் ஆசையை புரிந்து கொண்டு சிவகாமி சரி அவனை கூட்டிட்டு போயிட்டு வா என அனுப்பி வைக்கிறார்.

அதன் பிறகு ஆதி ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டிருக்க அந்த வழியாக வரும் ரவி ஆதியும் ஜெஸ்ஸி அப்பாவும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டதை பார்த்து தானும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என ஆசைப்பட்டு ஆதியிடம் சென்று இங்கிலீஷ் பேச அவன் விழுந்து விழுந்து சிரிக்கிறான். உனக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை, அவர் படித்தவர் நீ கிராமத்தான் உனக்கும் அவருக்கும் வித்தியாசம் இருக்கு தேவையில்லாதது எல்லாம் ஆசைப்படாத என கூறுகிறான். அவர் முன்னாடி பேசி என் மானத்தை வாங்காதே என ஆதி சொல்ல கண் கலங்குகிறார்.

பிறகு அவர் வைத்திருந்த மாதிரியே ஒரு போன் எனக்கும் ஒண்ணு கம்மியான விலையில் வாங்கித் தாடா என சொல்ல ஆதி அத வச்சுட்டு நீங்க என்ன பண்ண போறீங்க உங்களுக்கும் அதை யூஸ் பண்ண தெரியாது அம்மாவுக்கு யூஸ் பண்ண தெரியாது என படிக்காதவன் என்று அசிங்கப்படுத்துவது போல பேச இதை கேட்ட சந்தியா பிறகு மாமனாரை சமாதானம் செய்கிறார். உங்களுக்கு நான் போன் வாங்கி தரேன் உங்கள இங்கிலீஷ் பேச வைக்கிறேன் என சந்தியா சொல்கிறார்.

இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja rani2 serial episode update 14-09-22
jothika lakshu

Recent Posts

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…

12 hours ago

‘அந்நியன்’ போல நடந்த காதலரால் மன உளைச்சல்; காதல் தோல்வி குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…

13 hours ago

‘சிவாஜி’ படப்பிடிப்பில் ரஜினி அளித்த அன்பான வரவேற்பு – ஸ்ரேயா சரண் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…

15 hours ago

நீயெல்லாம் ஒரு ஆக்டரா? – ப்ரீத்தி முகுந்தன் குறித்து அசோக் செல்வன் கலகலப்பு!

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…

15 hours ago

சென்னை ஆடம்பர வீட்டைவிட மும்பையின் 1,700 சதுர அடி வீடுதான் மகிழ்ச்சி – சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…

16 hours ago

துல்கர் சல்மானின் ‘I’M GAME’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…

16 hours ago