raja rani riya-viswanathan-in-sandakozhi-serial-promo
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ரியா விஸ்வநாதன்.
திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சண்டைக்கோழி என பெயரிடப்பட்டுள்ள சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் அவருக்கு ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள் சீரியல் புகழ் நியாஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
பணக்கார குடும்பத்தை சேர்ந்த சிடுமூஞ்சி பையன் விக்ரம் ( நியாஸ் ) நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாலியான பொண்ணு மகா ( ரியா ) ஆகியோரின் முதல் சந்திப்பே மோதலில் தொடங்குகிறது.
அதாவது, இருவரும் ஒரு பஸ் ஸ்டாப்பிற்கு வர அந்த சமயம் மழை வர மகா மழையில் ஆட்டம் போட்டு தனது துப்பட்டாவை தூக்கி வீச அது விக்ரம் முகத்தில் போய் விழுகிறது. இதனால் அவன் ஹேய் லூசாடி நீ, துப்பட்டாவை முகத்துலயா வீசுவ என கோபப்பட மகா யார் லூசு? நீ லூசு, உன் அப்பா லூசு, உன் அம்மா லூசு, உன் தங்கச்சி லூசு என திட்டிக்கிட்டே போக விக்ரம் என் அம்மா லூசா என சண்டையிட அடுத்த ஷாட்டில் இருவரும் மணக்கோலத்தில் உட்கார்ந்திருக்கின்றனர்.
சண்டைக்கோழிகளாக இருந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தது எப்படி? இனி இவர்கள் வாழ்க்கையில் நடக்க போவது என்ன என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த சீரியல் வரும் மே 8-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீரியல் ஒளிபரப்பு நேரம் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…