அப்துல்லை காப்பாற்ற நினைத்த சந்தியா. உண்மையை கண்டுபிடித்த சந்தியா. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் அதிகாரிகள் அப்துல் தான் குற்றவாளி என நினைத்து அவரிடம் இருந்து தீவிரவாதிகள் குறித்த உண்மையை வெளியே கொண்டு வர கொடுமைப்படுத்துகின்றனர்.

ஒரு கட்டத்தில் சந்தியா உள்ளே புகுந்து அப்துல் நிரபராதி என சொல்ல போலீஸ் சந்தியாவை திட்டி வெளியே அனுப்புகிறது. இதனால் சந்தியா சரவணன் இடம் கண்டிப்பாக அப்துல் குற்றவாளி கிடையாது, அவர அடிச்சு கொன்னுடுவாங்க போல கண்டிப்பா இதை தடுத்து நிறுத்தணும் அதுக்கு தகுந்த ஆதாரம் வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்க அப்போது சேட்டன் அடிக்கடி போனை எடுத்து பார்ப்பதால் சந்தியா சந்தேகப்பட்டு அவரிடம் பேச்சு கொடுக்க செல்கிறார்.

அதன் பிறகு எல்லோரையும் ஒன்றாக கூட்ட போலீஸ் அதிகாரிகள் யாரை கேட்டு எல்லாரையும் ஒன்றாக நிற்க சொன்னிங்க என்ன விஷயம் என சத்தமிட பயிற்சி கொடுக்கும் போலீஸ் மேல் அதிகாரிகளிடம் ரகசியம் ஒன்றை சொல்ல பிறகு சந்தியா பேச தொடங்குகிறார்.

இந்த கூட்டத்துக்குள் தான் கருப்பு ஆடு ஒருத்தவங்க இருக்காங்க அவங்க தான் தீவிரவாதிகளுக்கு எல்லா விதமான தகவல்களையும் கொடுத்துட்டாங்க என சொல்ல சேட்டன் முகம் மாறுகிறது. இதனால் அவர் தான் அந்த கருப்பு ஆடு என எல்லோரும் நினைக்க கடைசியில் சந்தியா ஜோதி தான் அந்த கருப்பு ஆடு என்ன சொல்ல ஜோதி அங்கிருந்து தப்பித்து விட முயற்சி செய்ய போலீஸ் அவரை சுற்றி வளைக்கிறது.

இருந்தபோதிலும் மேலதிகாரிகள் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது எப்படி குற்றம் சொல்ல முடியும் என கேட்க அதற்கான தகுந்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக சொல்லி அந்த காட்டுக்குள் ஒரு ரகசிய அறையில் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொள்ள ஜோதி வாக்கி டாக்கி மறைத்து வைத்திருக்கும் விஷயத்தை சந்தியா கண்டுபிடித்தது தெரிய வருகிறது. பிறகு போலீஸ் அதிகாரிகளை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அதை நிரூபிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இன்னொரு ஆதாரம் இருக்கு என்ன சொல்லி தன் உடம்பில் இருந்து எடுத்த குண்டை எடுத்துக்காட்டி இது எல்லோரிடமும் இருக்கும் குண்டு இது எப்படி எனக்குள் வந்தது என சந்தேகம் இருந்தது. பிறகு சாரிடம் சொல்லி எல்லோருடைய துப்பாக்கிலும் குண்டை பரிசோதனை செய்ய சொன்ன போது ஜோதியின் துப்பாக்கி தான் ஒரு குண்டு குறைந்து இருக்கிறது. அதனால் அவர் தான் அந்த கருப்பு ஆடு என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja-rani-2 serial episode-update
jothika lakshu

Recent Posts

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

16 hours ago

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

16 hours ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

23 hours ago

Thangarathinamey – Video Song

https://youtu.be/apxygLROFF0?si=XIwXjw6_VBRTI9AW

23 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி.. இயக்குனர் அமீர் கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…

23 hours ago