raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா சிவகாமி அதிகாரிகளிடம் பேசியது நினைத்து டல்லாக இருக்க சரவணன் அவளை சமாதானம் செய்கிறான். பிறகு உங்கள விட்டுட்டு நான் எப்படி இருக்க போறேன்னு தெரியல என சந்தியா வருத்தப்பட சரவணன் இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோ ஒன்றை கண்ணாடியில் வைத்து நான் எப்போதும் போட்டோவாக உங்களுடன் தான் இருப்பேன் என சொல்கிறார்.
இந்தப் பக்கம் சிவகாமி தன்னுடைய கணவருடன் கோவிலுக்கு சென்றிருக்க அங்கு சந்தியாவுக்கு வேற ஊரில் போஸ்டிங் போட்டால் என்ன செய்வது என வருத்தப்பட்டுக் கொண்டிருக்க ரவி சந்தியா நினைச்ச மாதிரி ஐபிஎஸ் பயிற்சிக்கு வந்திருக்க அர்ச்சனாவுக்கு அவ ஆசைப்பட்ட மாதிரி ஆண் குழந்தை பிறந்திருக்கு இப்படி எல்லாமே நல்ல விஷயமாக நடக்கும் போது நீ ஏன் இப்படி இருக்க என ஆறுதல் கூறுகிறார்.
பிறகு இருவரும் மீண்டும் பயிற்சி மையத்துக்கு வர அப்போது அப்துல் தன்னுடைய அம்மாவுடன் பேசிக்கொண்டு வரும்போது அங்கு ஒரு கோப்பை இருப்பதை பார்த்து அங்கே நின்று இந்த கோப்பை யார் இந்த பயிற்சியில் சிறந்து விளங்குகிறார்களோ அவர்களுக்கு வழங்கப்படும் அதோடு அவர்களின் சொந்த ஊர்லையே போஸ்டிங் கொடுப்பாங்க என சொல்ல இந்த கோப்பையை நீ கண்டிப்பா ஜெயிக்கணும். அப்போதான் நீ எப்பயும் என் கூடவே இருக்க முடியும் என அவரது அம்மா சொல்கிறார்.
இதைக்கேட்ட சிவகாமி சந்தியா நம்ம கூடவே இருக்க ஒரு வழி இருக்கு. அதுக்கு அவ இந்த கோப்பையை ஜெயிக்கணும் என சொல்ல ரவி அதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை என சொல்ல இல்ல நான் இதைப்பற்றி சந்தியா கிட்ட பேச தான் போறேன் என சிவகாமி முடிவு எடுக்கிறார். பிறகு வேகமாக ரூமுக்கு ஓடி சென்று சந்தியாவை அழைத்து வருகிறார்.
இந்த கோப்பை எதுக்குனு உனக்கு தெரியுமா எனக்கேட்க சந்தியா பயிற்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த கோப்பையை பரிசாக கொடுப்பாங்க என கூறுகிறார். இந்தக் கோப்பையை நீ கண்டிப்பா ஜெயிக்கணும் என சொல்ல அதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல என சந்தியா சொல்கிறார்.
இந்தக் கோப்பையை ஜெயிக்கிறவங்களுக்கு சொந்த ஊரில் போஸ்டிங் கொடுப்பாங்கன்னு எனக்கு தெரியும். உன்னை வேற எங்கேயும் அனுப்ப மாட்டேன் நீ சொந்த ஊரில் போஸ்டிங் வாங்கியே ஆக வேண்டும் உன்னுடைய ஐபிஎஸ் கனவு முழுமையாக நிறைவேற வேண்டுமானால் இந்த கோப்பையை ஜெயித்து தான் ஆக வேண்டும் என சொல்ல சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…