raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோவிலில் பூஜை செய்து சரவணனுக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு செய்வதோடு பார்வதி, பாஸ்கருக்கும் மரியாதை செய்கின்றனர். பிறகு பூசாரி எல்லோருக்கும் சர்க்கரையை பிரசாதமாக கொடுக்க அப்போது தான் சக்கரை நியாபகம் வந்து உடனடியாக வெளியே ஓடுகிறார். அவரை தொடர்ந்து குடும்பத்தார் எல்லோரும் ஓடுகின்றனர்.
சந்தியா சக்கரையை தேடி பிடித்து செல்வம் ஏதாவது சொன்னாரா? பத்திரமா வச்சிக்க சொல்லி எதையாவது கொடுத்தானா என கேட்க முதலில் இல்லை என கூறிய சக்கரை பிறகு இந்த கோட் போட்டுட்டு கூட்டத்துக்குள்ள போகாதனு சொன்னாரு, இந்த வாட்ச் கொடுத்தாரு என கூறுகிறார். பிறகு சந்தியா சக்கரையை அவசரமாக வெளியே அழைத்து சென்று பாம் இருக்கா என பரிசோதனை செய்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு சக்கரையை ஆடாமல் அசையாமல் இருக்க சொல்லி கோட் கழட்ட பாம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு பார்வதிக்கு போலீஸ் செய்ததை போலவே டிப்பியூஸ் செய்கிறார். டிப்பியூஸ் ஆகி விட்டது என நினைத்து கொண்டு அனைவரும் சர்க்கரைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்க அப்போது திடீரென ஆதி இன்னும் டைமர் போயிட்டு தான் இருக்கு என கவனித்து சொல்ல என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார் சந்தியா
இந்த நேரத்தில் சரவணன் வெடி குண்டை பிடிங்கி கொண்டு ஒதுக்குபுறமான இடத்திற்கு ஓடுகிறார். செந்தில் சந்தியா உட்பட எலீலோரையும் தடுத்து நிறுத்த ஒரு கட்டத்தில் பாம் வெடித்து சிதறியது. சரவணனுக்கு என்னாச்சு என தெரியாமல் ஊர் மக்கள் உட்பட எல்லோரும் பதற்றமாக இருக்கின்றனர். அழுது புலம்புகின்றனர்.
இந்த நேரத்தில் சரவணன் சிறு காயங்களுடன் அந்த இடத்தில் இருந்து வெளியே வர சந்தியா ஓடி சென்று சரவணனை கட்டி பிடித்து ஆறுதல் கூறி கீழே அழைத்து வருகிறார். குடும்பம் அனைவரும் சரவணன் நல்லபடியாக வந்ததை எண்ணி சந்தோஷப்படுகின்றனர்.
சந்தியா சரவணன் இருவரும் மாறி மாறி பாராட்டி கொள்ள சரவணன் இனிமே நம்ம ஊர்ல இப்படி நடக்கவே நடக்காது என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc