Raja Rani 2 Serial Episode Update 29.03.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இது சீரியல் இன்றைய எபிசோட்டில் சந்தியா வீட்டில் சிவகாமி வாங்கிக் கொடுத்த தையல் மிஷினில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்க அந்த நேரத்தில் சரவணன் உள்ளே வர இதையெல்லாம் பார்த்து யார் இதெல்லாம் பண்ணது என கேட்கிறார்? அம்மா தான் இந்த மெஷின் வாங்கி வந்தாங்களா? எனக் கேட்க சந்தியாவும் ஆமாம் வீட்ல சும்மாதான இருக்க, இதை பயிற்சி செய்யும் என வாங்கி வந்து கொடுத்தாங்க என கூறுகிறார். இப்படியெல்லாம் செய்யறாங்க என சரவணன் யோசித்தவாறு இதெல்லாம் உங்களுக்கு 100-ல் ஒரு வேலை அவ்வளவு தான். இது நடந்தாலும் படிப்பை மட்டும் கைவிட்டு விடாதீர்கள் என சொல்கிறார்.
இந்த பக்கம் அர்ச்சனா சாமியாரை பார்க்க பணத்தோடு வந்த நிலையில் உனக்கு என்னால் ஆசீர்வாதம் செய்ய முடியாது என கூறுகிறார். அர்ச்சனா அப்படியெல்லாம் சொல்லாதீங்க நான் உங்களை நம்பி வந்திருக்கும் என கண்கலங்க பணத்தை பார்த்த சாமியார் வசமாக சிக்கிட்டா என மனதுக்குள் கணக்குப் போட்டு உனக்கு என்னுடைய குருஜி ஆசிர்வாதம் செய்வார் அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன் என்னோடு வா என கூட்டிச் செல்கிறார்.
அங்கு கிட்டத்தட்ட பிரபல சாமியார் ஒருவர் வேடத்தில் ஆதவன் இருக்கிறார். அந்த போலி சாமியார் ஒரு ஜவுளி கடை தேடி வந்து சிக்கி இருக்கான் அவனை வச்சு நல்லா பணம் கறக்கலாம் என சொல்லி அர்ச்சனாவை உள்ளே அழைத்துச் செல்கிறார். அர்ச்சனாவின் பார்த்ததும் சாமியார் ஜொல்லு விடுகிறார். அவரை உட்காரச் சொல்லி அவரின் பிரச்சனை என்னவென்று கேட்டு அவருக்கு ஒரு மருந்து கொடுக்கிறார்.
இந்த மருந்தை வெயிலில் உலர்த்தி சாப்பிட வேண்டும் என சொல்லி ஒரு மந்திரத்தையும் சொல்கிறார். உனக்கு உன் வீட்டில் நிறைய எதிரிகள் இருப்பார்கள் அவர்களால் உன்னை நெருங்க முடியாது அதற்கு நீ அடிக்கடி இங்கே வந்து என்னை பார்க்க வேண்டும் என கூறுகிறார். அர்ச்சனாவும் சரி என சொல்கிறார். அதன் பிறகு குழந்தை யாருடைய ஜாடையில் இருக்கும் என கேட்க மருந்தை நான் தானே கொடுத்திருக்கேன், அப்போ என் ஜாடையில் தான் இருக்கும் என சொல்ல அர்ச்சனா என்ன சொல்றீங்க எனக் கேட்க என்னைப்போல் தெய்வீகமாக இருக்கும் என கூறுகிறார்.
பிறகு சந்தியா தலைக்கு குளித்து விட்டு தலையைத் துவட்டிக் கொண்டே இருக்க அங்கு வந்து சரவணன் அவருக்கு தலை துவட்டி விட்டு சாம்பிராணிப் போடுகிறார். பிறகு இன்னைக்கு சாயங்காலம் நீங்க கோச்சிங் கிளாஸ் போகணும் நானே உங்களைக் கூட்டிச் செல்கிறேன் எனக் கூறுகிறார். எனக்கு பயமாக இருக்கிறது அத்தையிடம் சொல்லிவிடலாம் என சொல்ல நேரம் வரும்போது சொல்லலாம் இப்போது வேண்டாம் என சரவணன் கூறுகிறார்.
சந்தியாவும் சரவணனும் செய்யும் தில்லாலங்கடி வேலை, போலி சாமியாரிடம் சிக்கிய அர்ச்சனா – ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்.!!
அத்தைகிட்ட சிக்கிட்டா தப்பாகி விடும் என சொல்ல என்னை முழுசா நம்புங்க, நான் பார்த்துகிறேன் என கூறுகிறார். சாயங்காலம் நானே வந்து உங்களைக் கூட்டிச் செல்கிறேன் எனவும் சொல்கிறார். அதேபோல் சாயங்கால இரவு வீட்டில் இருக்கும் போது சரவணன் களைப்பாக உட்காருகிறார். அவருடைய அப்பா என்னடா நல்லா இருக்கா என கேட்க கடைல ரொம்ப வேலை கூட்டம் ஜாஸ்தி என கூறுகிறார். கூட ஒரு ஆளை வேலைக்கு வச்சிக்க வேண்டியது தானே என சொல்ல வேலைக்கு ஆள் வேணும் தான் என சரவணன் கூறுகிறார்.
இந்த நேரத்தில் சிவகாமி ஆனால் எங்க வர அந்த நாலு மாசம் இருக்காங்க அப்புறம் ஓடிப் போய்டுறாங்க என கூறுகிறார். இப்படியான நேரத்தில் சிவகாமி உங்கப்பா அவளைக் கண்டுகொள்ளாமல் பார்த்த அவர் தல வியாபாரம் நடக்குதோ இல்லயோ இருக்கிற தின்பண்டங்கள் அவர் வயித்துக்குள்ள போகும் என கூறுகிறார்.
அதன் பிறகு ஆதி செந்தில் அவங்களுக்கு அவங்க வேலையே கரெக்டா இருக்கு. அர்ச்சனா வாயும் வயிறும் ஆ இருக்கா. பார்வதி படிக்கிற பொண்ணு சந்தியா தான் இப்போதைக்கு சும்மா இருக்க அவளையே நீ கூட்டிட்டு போ என சொல்ல சரவணன் நினைத்தது போலவே நடக்கிறது என சந்தோஷப்பட்டு சரி என கூறுகிறார். சந்தியா நீ என்ன சொல்ற என சரவணனின் அப்பா கேட்க அத்தை சொல்ற மாதிரி நடந்துக்கிறேன் என கூறுகிறார்.
பிறகு இருவரையும் கடைக்கு கிளம்ப செல்கிறார் சிவகாமி. சீக்கிரம் வாங்க என சரவணன் சந்தியாவிடம் சொல்ல மயிலு ஏதோ தப்பா இருக்கே என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…