raja-rani-2 serial episode-update-28-02-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணன் சந்தியா இருவரும் ஒன்றாக வீட்டுக்கு வர சந்தியா டல்லாக இருப்பதை பார்த்து சரவணன் என்னாச்சு என கேட்டு எஸ்பி ஆபிஸில் நடந்த விஷயத்தை கூறுகிறார்.
இந்த பக்கம் அர்ச்சனா உங்க எல்லாருக்கும் இளிச்சவாய் இந்த குடும்பத்துல வாழ்ந்தது போதும் என பேக்கை தூக்கி கொண்டு கிளம்ப அப்போது சரவணன் சந்தியா என இருவரும் உள்ளே வந்து நடந்த விஷயத்தை பற்றி கேட்க சிவகாமி சந்தியா போன் எடுக்காததால் திட்டி தீர்க்கிறார்.
அதன் பிறகு சிவகாமி நடந்த விஷயங்களை சொல்ல சரவணன் சந்தியாவுக்கு நடந்த விஷயத்தை பற்றி சொல்லி அவர் டயர்டாக இருப்பதால் சென்று ரெஸ்ட் எடுக்க சொல்கிறார். பிறகு நான் யாரையும் வேற மாதிரி பாக்கல உங்க மூணு பேரையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறேன் நீ இப்படி எல்லாம் பேசாத மனசு கஷ்டமா இருக்கு என்ன கண் கலங்க அர்ச்சனா சரி அழுவாதீங்க என உள்ளே சென்று விடுகிறார்.
பிறகு கவிதா போட்டு வாங்கிய இந்த விஷயத்தை செய்ததை தெரிந்து கொள்ளும் அர்ச்சனா என்ன நடக்க போகுது என பயந்து புலம்ப செந்தில் வந்து நீ இடையில ஏதாவது பண்ணியா என கேட்டேன் அர்ச்சனா சத்தம் போட செந்தில் அமைதியாகி வெளியே வந்து விடுகிறான்.
அதன் பிறகு ஆதி வந்து யாராவது பெரிய ஆபிஸர் பேசினால் பிரச்சனையை சரி செய்யலாம் என சொல்றாங்க என்ன சொல்ல சிவகாமி சந்தியாவை பேச சொல்லலாம் என சரவணனிடம் சொல்லி சந்தியாவிடம் பேச சொல்ல சரவணன் சந்தியா டயர்ட் ஆக இருந்ததால் பேசாமல் இருந்து விடுகிறார். மறுநாள் காலையில் சந்தியாவிடம் பேச முயற்சி செய்து பிறகு பேசாமல் அமைதியாக இருந்து விட சந்தியா வேலைக்கு கிளம்பி விடுகிறார்.
பிறகு ஆதி அன்னியிடம் பேசினியாய் என கேட்க இன்னும் இல்லடா பேசுறேன் என சொல்ல அங்கு வரும் சிவகாமி அது கூட உனக்கு கஷ்டமா இருக்கா என சத்தம் போட பிறகு சரவணன் முதல்ல ஸ்டேஷனுக்கு போய் இந்த விஷயத்தை பேசிட்டு அதுக்கப்புறம் கடைக்கு போவதாக சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…