சரவணன் வீட்டிற்கு வந்த போன் கால்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட்டில் பார்வதி காணாமல் குடும்பம் மொத்தமும் பதறிப் போய் இருக்க சந்தியாவும் சரவணனும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு வந்ததும் என்னாச்சு என விசாரிக்கின்றனர். பிறகு போலீஸ் போன் செய்து கருணாகரனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் தான் தெரிகிறது என சொல்ல சந்தியா போலீஸ் சொன்னாலும் நம்ப வேண்டாம் நாம ஒரு முறை உறுதி செய்து கொள்வோம் என கூறுகிறார்.

தமிழில் போலீஸ் சரவணனிடம் கடைசியாக பார்வதியின் செல்போன் உங்க கடையின் முன்பு தான் ஆப் ஆகி இருக்கிறது அதன் பிறகுதான் அவரை காணவில்லை என கூறுகின்றனர்.

பிறகு பார்வதியை கடத்திக் கொண்டு சென்றுள்ள நிலையில் அவர் கண் விழித்ததும் செல்வம் உன்னை வைத்துதான் உங்களது காரியத்தை சாதிக்க போகிறோம் இந்த திருவிழாவில் உன் உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டி மனித வெடிகுண்டாக அனுப்பி வைக்கப் போகிறோம். உங்களுடைய இந்த தியாகத்தை எங்களுடைய இயக்கம் கடைசிவரை போற்றும் என கூறுகிறார். நீ நினைக்கறது எதுவும் நடக்காது என்ற அண்ணா அண்ணி உன்னை சும்மா விட மாட்டாங்க என சொல்ல செல்வம் யார் இங்கே வந்தாலும் அவங்க கொலைதான் என கூறுகிறார்.

பல இடங்களில் தேடிய சிவகாமி மனம் உடைந்துபோய் வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். பிறகு பாஸ்கர் வீட்டில் பார்வதி பற்றி கேட்க நான் என்ன சொல்வது எனக்கு என்ன சொல்றதுனே தெரியல என கதறி அழுகிறார். இந்த நேரத்தில் ஒரு போன் கால் வரை பாஸ்கர் ஓடிச்சென்று எடுக்கிறார். கவர்மெண்ட் மருத்துவமனைக்கு வருமாறு போனில் சொல்ல குடும்பமே பதறிப் போகின்றனர். பாஸ்கர் கதறி அழ சிவகாமி என் பொண்ணுக்கு எண்ணமோ நடந்து போச்சு என அறிகிறார். உடனே சந்தியா கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்க, போன்ல என்ன சொன்னாங்க மருத்துவமனைக்கு வர தான் சொன்னாங்க வேற எதுவும் சொல்லலையே என சமாதானம் செய்கிறார்.

பார்வதிக்கு எதுவும் ஆகாது என நம்ப வேண்டும் அப்போதுதான் அவள் நல்லபடியாக இருப்பாள் என கூறுகிறார். பிறகு சந்தியா வாங்க நீங்களும் நானும் மருத்துவமனைக்கு போயிட்டு வரலாம் என சொல்ல பாஸ்கர் நானும் வருகிறேன் என கூறுகிறார். இப்போதிருக்கும் மனநிலையில் நீங்க வர வேண்டாம் என சந்தியா சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 18.05.22
jothika lakshu

Recent Posts

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…

2 hours ago

‘அந்நியன்’ போல நடந்த காதலரால் மன உளைச்சல்; காதல் தோல்வி குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…

3 hours ago

‘சிவாஜி’ படப்பிடிப்பில் ரஜினி அளித்த அன்பான வரவேற்பு – ஸ்ரேயா சரண் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…

5 hours ago

நீயெல்லாம் ஒரு ஆக்டரா? – ப்ரீத்தி முகுந்தன் குறித்து அசோக் செல்வன் கலகலப்பு!

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…

5 hours ago

சென்னை ஆடம்பர வீட்டைவிட மும்பையின் 1,700 சதுர அடி வீடுதான் மகிழ்ச்சி – சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…

6 hours ago

துல்கர் சல்மானின் ‘I’M GAME’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…

6 hours ago