raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சாமியாரை பார்க்க போன அர்ச்சனா மாமியாருக்கும் சந்தியாவுக்கும் இடையே பிரச்சனை பெருசாக வேண்டும் என் மாமியார் சவாலில் ஜெயிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு வருகிறார்.
இந்தப் பக்கம் சந்தியா கிளாஸ் கேன்சல் ஆனது நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அப்போது அவரை கூல் படுத்த கண்ணாமூச்சி விளையாடலாம் என சரவணன் சொல்லப் பிறகு இருவரும் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர். திடீரென சரவணன் பேங்கில் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக மெசேஜ் வர உடனே அதை சந்தியாவிடம் சொல்ல ஏற்கனவே இது போல ஒரு முறை பணம் எடுக்கப்பட்டது என சொல்ல பேங்க் கிட்ட பேசி கம்பளைண்ட் கொடுக்கின்றனர்.
பிறகு ஊரிலிருந்து சிலர் வீட்டுக்கு வந்து சாமியார் கோவில் கட்ட போவதாகவும் அதற்கு டொனேஷன் கொடுக்க வேண்டும் எனவும் இந்த பணத்தை வசூல் செய்ய குழுவின் தலைவராக ரவி இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள சிவகாமி அதெல்லாம் தாராளமாக இருக்கட்டும் என பத்தாயிரம் ரூபாய் டொனேஷன்.
பிறகு பேப்பரில் இந்த சாமியார் ஆண் குழந்தை பிறப்பதற்கு லேகியம் இருப்பதாக சொல்லி விளம்பரம் கொடுத்து இருக்க அதை பார்க்க சந்தியா அர்ச்சனா சாப்பிடுவது லேகியம் தான் என நேராக அவரிடம் சென்று இது பற்றி கேட்க அர்ச்சனா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் பேங்கில் இருந்து சிலர் வந்து இரண்டு முறையும் பணம் எடுத்தவர் ஒரே ஒருவர்தான். அவர்களுடைய போட்டோ இருக்கிறது என அர்ச்சனாவின் புகைப்படத்தை காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…