அர்ச்சனா போட்ட திட்டம்.. விக்கி கொடுத்த ஷாக்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் பார்வதிக்கு கல்யாணத்துக்கு நாள் குறிக்க கோவிலில் இரண்டு குடும்பத்தாரின் கூடியுள்ளனர். பாஸ்கரின் அம்மா பார்வதி சொன்ன மாதிரியே பாஸ் பண்ணிட்டா. நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணி இருக்கா அதனால எனக்கு ஒரு சந்தேகம்.. மேற்கொண்டு ஏதாவது படிக்க ஆசைப்படுகிறாளா என கேட்க பார்வதி அப்படியெல்லாம் எனக்கு எந்த ஆசையும் இல்லை என குறிப்பிடுகிறார். எனக்கு வீட்டில் உள்ளவர்கள் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் விக்கியிடம் இருந்து பார்வதிக்கு போன் வர அவர் அதிர்ச்சி அடைகிறார்.

எல்லோரும் போய் பேசிட்டு வா என அனுப்பி பார்வதி போன் எடுத்துப் பேச விக்கி நான் கோவிலுக்கு வெளியே தான் இருக்கேன் உள்ளே வந்து எல்லா உண்மையும் சொல்லி எல்லாத்துக்கும் ஃபுல் ஸ்டாப் வைக்கவா என கேட்கிறார். இதனால் பார்வதி அதிர்ச்சி அடைய சிவகாமி இன்னும் எவ்வளவு நேரம் பேசுவ வா என கூப்பிட போனை கட் செய்துவிட்டு ஓடிவிடுகிறார். பிறகு விக்கி பாஸ்கருக்கு போன் செய்து கோவில் எங்கே இருக்கு என்ன ஏது என விசாரிக்கிறார். பாஸ்கரும் விக்கிக்கு முகவரியை சொல்கிறார்.

இதனை அடுத்து சந்தியாவும் சரவணனும் குளத்தின் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பார்வதியின் கல்யாணம் முடிந்து கோச்சிங் கிளாஸ் போயிருக்கலாம் என சந்தியா சொன்னா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என சரவணன் கூறுகிறார். இன்னும் கொஞ்ச நாள்ல அர்ச்சனாவுக்கு குழந்தை பிறந்திடும், அப்புறம் பார்வதி ஒரு குழந்தையை பெற்றுக்குவா சரவணன் சொல்ல நாம எப்போ அப்பா அம்மாவா ஆகிறது என சந்தியா கேட்கிறாள். முதலில் போலீசாகணும், அதற்கப்புறம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். நீண்ட நாள் கனவுக்காக நம்முடைய தனிப்பட்ட ஆசையை தள்ளி வைப்பது தவறு இல்லை என சரவணன் சொல்கிறார்.

அதன்பிறகு இந்தப் பக்கம் அர்ச்சனா தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து நாளைக்கு நீயும் அப்பாவும் தங்கச்சிய கூட்டிட்டு வந்துடுங்க, ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும் என சொல்கிறார். பிறகு தங்கச்சி கிட்ட விஷயத்தை சொல்ல அவர் சந்தோஷப்படுகிறார். அதன்பிறகு சாப்பிடும் நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் பார்வதியை கிண்டல் செய்து கொண்டிருக்க சரவணன் பாஸ்கர் வீட்டிலிருந்து போன் பண்ணாங்க நாளை மறுநாள் துணி எடுக்க போகலாம்னு சொன்னாங்க, அதை உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன் என சரவணன் சொல்கிறார். நீங்க என்ன தான் துணி எடுத்தாலும் அதை கட்டிக்கிட்டு மன மேடை ஏற போறது என் தங்கச்சி தான் என அர்ச்சனா மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்.

பிறகு பார்வதியும் பாஸ்கரும் போனில் பேசிக்கொண்டிருக்க விக்கி பார்வதிக்கு போன் செய்கிறார். போனை எடுக்க பார்வதியிடம் பாஸ்கரை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலாம். நான் உன்னோட வாழ்க்கையில் தலையிட மாட்டேன். ஆனா அதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயம் நான் சொல்றதை நீ செய்யணும் என கூறுகிறார். கல்யாணத்துக்கு முன்னாடி என்கூட நீ வாழனும். ஒரே ஒருநாள் போதும். எதுவுமே நடக்காத மாதிரி நீ பாஸ்கரை கல்யாணம் பண்ணிக்கலாம். வாழ்க்கையில விக்கி வந்துட்டு போன தடமே தெரியாது என கூறுகிறார். இதை கேட்ட பார்வதி அதிர்ச்சி அடைகிறார். எப்போ வெச்சுக்கலாம்னு சொல்லு எங்க வரனும்னு நான் சொல்றேன் என விக்கி சொல்லிவிட்டு போனை வைக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌ ‌

Raja Rani 2 Serial Episode Update 11.04.22
jothika lakshu

Recent Posts

‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!

'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…

3 hours ago

‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு

‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…

3 hours ago

இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா

இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…

3 hours ago

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்’ வெளியிட திட்டம்?

விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…

3 hours ago

‘புருஷன்’ பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும்

'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…

3 hours ago

Uyire Uyire – Lyrical video

https://youtu.be/qPaPA3AQ4JI?si=rIh8FG_BJwv1wjsy

12 hours ago